Realme Narzo 60 Series அறிமுகம்: அதிக விலை போன்களுக்கு ஆப்பு.. விலை, பிற விவரங்கள் இதோ

Realme Narzo 60 Series: இந்த ரியல்மீ போன் அறிமுகம் ஆகும் முன்னரே இதை பற்றி பல விஷயங்கள் தெரிந்திருந்தன. போனின் சிறப்பம்சங்கள் குறித்து பல தகவல்கள் வெளியாகின. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jul 7, 2023, 09:10 AM IST
  • Realme Narzo 60 சீரிசின் விலை மிக குறைவாக உள்ளது.
  • எனினும் அதற்காக இதன் வடிவமைபில் எந்த குறையும் கூற முடியாது.
  • இந்த போனின் வடிவமைப்பு ப்ரீமியம் தரத்தில் உள்ளது.
Realme Narzo 60 Series அறிமுகம்: அதிக விலை போன்களுக்கு ஆப்பு.. விலை, பிற விவரங்கள் இதோ title=

பிரபல ஸ்மார்ட்போன் நிறுவனமான ரியல்மீ (Realme) இந்தியாவில் ரியல்மீ நார்சோ 60 (Realme Narzo 60) தொடரை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த தொடரில் இரண்டு மாடல்கள் உள்ளன (Realme Narzo 60 மற்றும் Realme Narzo 60 Pro). இந்த ரியல்மீ போன் அறிமுகம் ஆகும் முன்னரே இதை பற்றி பல விஷயங்கள் தெரிந்திருந்தன. போனின் சிறப்பம்சங்கள் குறித்து பல தகவல்கள் வெளியாகின. இதனால் இந்த போன் குறித்த எதிர்பார்ப்புகளும் ஸ்மார்ட்போன் பிரியர்கள் இடையே மிக அதிகமாகவே இருந்தது. 

தற்போது இந்த அட்டகாசமான ரிலய்மீ போன் அறிமுகம் ஆகி விட்டது. நிறுவனம் இந்த தொடரை சிறந்த அம்சங்களுடன் அறிமுகப்படுத்தியுள்ளது. Realme Narzo 60 தொடரின் விலை மற்றும் அம்சங்களை பற்றி இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம். 

Realme Narzo 60 Series: வடிவமைப்பு

Realme Narzo 60 சீரிசின் விலை மிக குறைவாக உள்ளது. எனினும் அதற்காக இதன் வடிவமைபில் எந்த குறையும் கூற முடியாது. இந்த போனின் வடிவமைப்பு ப்ரீமியம் தரத்தில் உள்ளது. இந்த போன் கண்டிப்பாக வாடிக்கையாளர்களை உற்சாகப்படுத்தும் வண்ணம் இருக்கும்  என மொபைல் போன் நிபுணர்கள் கூறுகிறார்கள். 

Realme Narzo 60 தொலைபேசியின் பின்புறத்தில் ஒரு பெரிய வட்ட கேமரா ஐலேண்ட் உள்ளது. இது வீகன் லெதர் பேக் பதிப்பில் வருகிறது. வெண்ணிலா மாடலில் பிளாட் டிஸ்ப்ளே உள்ளது. ப்ரோ வளைந்த திரையை (கர்வ்ட் டிஸ்ப்ளே) கொண்டுள்ளது. ப்ரோ வேரியண்டில் பேனல் பெரிதாக இருப்பது மட்டுமல்லாமல், மிகச் சில பெசல்கள் அனைத்து இடங்களிலும் காணப்படுகின்றன.

Realme Narzo 60 Series: விவரக்குறிப்புகள்

Realme Narzo 60 ஆனது 90Hz புதுப்பிப்பு வீதத்துடன் 6.43-இன்ச் FHD+ OLED டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. Narzo 60 Pro -வில் 120Hz புதுப்பிப்பு வீதத்துடன் (ரெஃப்ரெஷ் ரேட்) 10-பிட் 6.7-இன்ச் FHD+ வளைந்த OLED டிஸ்ப்ளே உள்ளது. Narzo 60 ஆனது Dimensity 6020 சிப்பைக் கொண்டுள்ளது. அதே வேளையில் Narzo 60 Pro ஆனது மிகவும் சக்திவாய்ந்த Dimensity 7050 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இரண்டும் ஆண்ட்ராய்டு 13 அடிப்படையிலான Realme UI 4.0 ஐ பூட் செய்கின்றன. 

மேலும் படிக்க | ட்விட்டர் மட்டும் இல்லை! வாட்ஸ்அப்க்கும் போட்டியாக வந்துள்ள புதிய ஆப்!

Realme Narzo 60 Series: கேமரா

வெண்ணிலா மாடலில் உள்ள கேமராவைப் பற்றி பேசுகையில், இது 64MP முதன்மை சென்சார் மற்றும் 8MP செல்ஃபி கேமராவுடன் வருகிறது. அதே நேரத்தில், ப்ரோ மாறுபாடு OIS-உதவியுடன் 100MP பிரதான சென்சார் மற்றும் 16MP முன் எதிர்கொள்ளும் ஷூட்டர் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. கூடுதலாக, இரண்டுமே 2MP டெப்த் சென்சாரை கொண்டுள்ளன. 

Realme Narzo 60 Series: பேட்டரி

இது தவிர, இரண்டு போன்களும் இரட்டை ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் மற்றும் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் (ஃபிங்கர்ப்ரிண் சென்சார்) உடன் வருகின்றன. இருப்பினும், வெண்ணிலா மாடலில் மட்டுமே 3.5 மிமீ ஹெட்ஃபோன் ஜாக் மற்றும் மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட்டை காண முடியும். இறுதியாக, ஆனால் முக்கியமான விஷயமாக இவை இரண்டும் 5,000mAh பேட்டரியைக் கொண்டுள்ளன. ஆனால் Narzo 60 இன் 33W ஆதரவுடன் ஒப்பிடும்போது Narzo 60 Pro 67W மூலம் போன் வேகமாக சார்ஜ் ஆகிறது.

கூடுதல் தகவல்

சில நாட்களுக்கு முன்னர் ரியல்மீ நிறுவனம் Realme 11 Pro + போனை இந்தியாவில் அறிமுக செய்தது.  நிறுவனம் அதன் Realme 11 தொடரின் டாப் எண்ட் மாடலை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இந்த ஸ்மார்ட்போன் சிறந்த வடிவமைப்பு மற்றும் அசத்தலான அம்சங்களுடன் அறிமுகம் ஆகியுள்ளது. இந்த தொலைபேசியில் 200MP கேமரா உள்ளது. இதை பற்றி ஸ்மார்ட்போன் சந்தையில் அதிகம் பேசப்படுவது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | ஜிலேபியை பிச்சு போட்ட மாதிரி... இல்ல இல்ல 'கு' மாதிரி - Threads லோகோ எதை குறிக்கிறது?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News