இன்றைய காலகட்டத்தில் வாட்ஸ்அப் அனைவருக்கும் ஒரு இன்றியமையாத மொபைல் அம்சம் ஆகிவிட்டது. வாட்ஸ்அப் உலகின் மிகவும் பிரபலமான செய்தியிடல் தளங்களில் ஒன்றாகும். இதில் உங்களுக்கு பல அற்புதமான அம்சங்கள் வழங்கப்படுகின்றன. இந்த செயலியின் மிக முக்கியமான அம்சங்களைப் பற்றி இந்த பதிவில் காணலாம். இந்த அம்சங்களைப் பயன்படுத்தினால், நீங்கள் வாட்ஸ்அப்-ஐ பயன்படுத்தும் உங்கள் பாணியே மாறிவிடக்கூடும்.
வியூ ஒன்ஸ் ஃபீச்சர்
வாட்ஸ்அப் சமீபத்தில் வியூ ஒன்ஸ் அம்சத்தை வெளியிட்டது. இதில் ஸ்னாப்சாட்டைப் போலவே, ஒரு பயனர் ஒரு படம் அல்லது வீடியோவை ஒரு முறை மட்டுமே பார்க்கும் வகையில், இவற்றை பகிர முடியும். ஒரு முறை பார்க்கப்பட்ட பிறகு அவை மறைந்துவிடும். புகைப்படம் அல்லது வீடியோவைப் பகிரும் போது, அங்கு கொடுக்கப்பட்டுள்ள '1' விருப்பத்தைத் தேர்ந்தெடுத்து இந்த அம்சத்தைப் பயன்படுத்தலாம்.
ஐபோனில் இருந்து ஆண்ட்ராய்டு ஃபோனுக்கு சேட்களை மாற்றலாம்
2021 இல் வெளியிடப்பட்ட வாட்ஸ்அப்பின் இந்த அம்சம் பயனர்களால் அதிகம் விரும்பப்பட்டது. இந்த அம்சத்தின் உதவியுடன், யூ.எஸ்.பி டைப்-சி கேபிள் மூலம் உங்கள் அரட்டைகளை ஒரு போனில் இருந்து மற்றொரு போனுக்கு அனுப்பலாம். WhatsApp செட்டிங்சில் இந்த விருப்பத்தை நீங்கள் காணலாம்.
மேலும் படிக்க | OnePlus-ன் புதிய மாடல் : விலை என்ன தெரியுமா.?
whatsapp இல் பணம் அனுப்பவும் பெறவும் முடியும்
இந்த மெசேஜிங் செயலியானது, 'WhatsApp Pay' என்ற சிறப்பு UPI அடிப்படையிலான கட்டண தளத்தையும் தொடங்கியுள்ளது. இதைப் பயன்படுத்தி நீங்கள் WhatsApp சேட்டிலேயே யாருக்கு வேண்டுமானாலும் பணம் அனுப்பலாம், பெறலாம்.
மடிக்கணினியிலிருந்து தொலைபேசி அழைப்புகளை அடெண்ட் செய்யலாம்
சில காலத்திற்கு முன்பு வெளியிடப்பட்ட இந்த அம்சத்தை பயனர்களும் மிகவும் விரும்புகின்றனர். இந்த அம்சத்தின் உதவியுடன், நீங்கள் இப்போது உங்கள் லேப்டாப் அல்லது டெஸ்க்டாப்பில் இருந்து வாட்ஸ்அப்பில் வரும் குரல் மற்றும் வீடியோ அழைப்புகளை அடெண்ட் செய்யலாம்.
பல சாதன அம்சம்
வாட்ஸ்அப்பின் இந்த அம்சமும் அற்புதமானது. சில மாதங்களுக்கு முன்பு வெளியிடப்பட்ட இந்த மல்டி-டிவைஸ் அம்சத்தின் உதவியுடன், உங்கள் தொலைபேசி-யை இணையத்துடன் இணைக்காமல் பல சாதனங்களில் WhatsApp ஐ அணுகலாம்.
மேலும் படிக்க | ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீமில் ஹாட்ஸ்டார், அமேசான் இலவசம்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR