ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீமில் ஹாட்ஸ்டார், அமேசான் இலவசம்!

ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் பாக்ஸ் விலை ரூ.499 ஆக குறைந்ததோடு டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார், அமேசான் ப்ரைம் வீடியோ போன்றவற்றை இலவசமாக வழங்குகிறது.  

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Mar 25, 2022, 04:01 PM IST
  • ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் விலை ரூ.2000லிருந்து ரூ.499 ஆக குறைக்கப்பட்டுள்ளது.
  • அமேசான் ப்ரைம் மற்றும் ஹாட்ஸ்டார் இலவசமாக கிடைக்கிறது.
  • முதன்முதலில் ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் பாக்ஸ் விலை ரூ.2,499 ஆக இருந்தது.
ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீமில் ஹாட்ஸ்டார், அமேசான் இலவசம்! title=

ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் பாக்ஸ் விலை ரூ.2000லிருந்து குறைக்கப்பட்டு தற்போது ரூ.499 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.  எக்ஸ்ஸ்ட்ரீம் பாக்ஸ் ஆப்ஷனுடன் புதிய ஏர்டெல் டிஜிட்டல் டிவி இணைப்புகளைப் பெறும் வாடிக்கையாளர்களுக்கு இந்த விலை பொருந்தும்.  இந்த டிடிஹெச் செட் அப் பாக்ஸ் ஆனது அமேசான் ப்ரைம் வீடியோ மற்றும் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் உள்ளிட்ட ஓடிடி தளங்களுக்கான பயன்பாடுகளையும் இலவசமாக வழங்குகிறது.  செப்டம்பர் 2019-ல் ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ஸ்டிக்குடன் எக்ஸ்ஸ்ட்ரீம் பாக்ஸை அறிமுகப்படுத்தியது, இவை இரண்டுமே ரூ.3,999க்கு விற்கப்பட்டது.

airtel

மேலும் படிக்க | அமேசான் கிளியரண்ஸ் சேல்: JBL, Boat ஹெட்செட்களுக்கு 85% வரை தள்ளுபடி!

முதன்முதலில் ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் பாக்ஸ் விலை ரூ.2,499 ஆக இருந்தது, பின்னர் ஏர்டெல் அதனை ரூ.2000 ஆக குறைத்தது.  விலையை குறைத்தபோதிலும் புதிய எக்ஸ்ஸ்ட்ரீம் பாக்ஸைப் பெறும் வாடிக்கையாளர்களுக்கு ஏர்டெல் கூடுதலாக ,டிஸ்னி+ ஹாட்ஸ்டார் , அமேசான் பிரைம் வீடியோ, சோனிலைவ், ஈரோஸ் நவ், ஹங்காமா போன்றவற்றை இலவசமாக வழங்கியது. டிடிஹெச்- ஐ மையமாகக் கொண்ட ட்ரீம் டிடிஹெச் தளத்தின் அறிக்கைப்படி, ஏர்டெல் தளம் இந்த விலை குறைப்பை அங்கீகரிக்கப்பட்ட டீலர்கள் மூலம் புதிய இணைப்பு பெருபவர்களுக்கும் அளிக்கிறது.  இந்த சலுகை குறிப்பிட்ட காலங்களுக்கு கிடைக்கும் என்று கூறப்படுகிறது.  

மேலும் இது ஒரு வருட டிஸ்னி+ ஹாட்ஸ்டார் பயன்பாட்டையும், மூன்று மாத அமேசான் பிரைம் வீடியோ பயன்பாட்டையும், சோனிலைவ், ஈரோஸ் நவ் மற்றும் ஹங்காமா போன்றவற்றின் பயன்பாட்டையும் வழங்கி நன்மையளிக்கிறது.  இந்த எக்ஸ்ஸ்ட்ரீம் பாக்ஸ் ஆனது ஆண்ட்ராய்டு 9.0 பை அடிப்படையிலான ஆண்ட்ராய்டு டிவி ஓஎஸ்ஸில் இயங்குகிறது.  அதுமட்டுமல்லாது இதிலுள்ள கூகுள் பிளே 5,000க்கும் மேற்பட்ட செயலிகள் மற்றும் கேம்களுக்கான பயன்பாட்டை வழங்குகிறது.  மேலும் இதிலுள்ள குரோம்கேஸ்ட் ஆனது ஸ்மார்ட்போன் மூலம் ஸ்ட்ரீமிங் செய்வதற்கான அனுமதியையும் வழங்குகிறது.  ஓடிடி ஆதரவை வழங்குவதோடு, ஏர்டெல்லின் எக்ஸ்ஸ்ட்ரீம் பாக்ஸ் வழக்கமான டிடிஹெச் சேவைகளுடன் இயங்குகிறது.  

airtel

வாடிக்கையாளர்கள் ஓடிடி மற்றும் டிடிஹெச் இரண்டையும் பயன்படுத்த குறைந்தபட்ச மாதாந்திரத் தொகையான ரூ.153 செலுத்த வேண்டும்.  கடந்த மாதம், ஏர்டெல் தனது எக்ஸ்ஸ்ட்ரீம் பிரீமியம் சேவையை 15 இந்திய மற்றும் உலகளாவிய ஓடிடி இயங்குதளங்களுக்கான அனுமதியை வழங்கியது.  இதன் விலை மாதத்திற்கு ரூ.149 என்றும் வருடத்திற்கு ரூ.1499 என்ற அளவிலும் இருந்தது.

மேலும் படிக்க | IPL 2022 Live ஸ்ட்ரீமிங் இலவசமா பார்க்கணுமா? இதை செய்தால் போதும்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News