ஏர் இந்தியா நிறுவனம் மூடப்படும் என வெளியான தகவல் வதந்தி; சேவை தொடரும்: CMD

ஏர் இந்தியா சேவையை நிறுத்தப் போவதாக வெளியான தகவலில் உண்மை இல்லை. அது வெறும் வதந்தி தான். ஏர் இந்தியா தொடர்ந்து பறந்து விரிவடையும் என நிர்வாக இயக்குநர் தெரிவித்துள்ளார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 5, 2020, 08:09 AM IST
ஏர் இந்தியா நிறுவனம் மூடப்படும் என வெளியான தகவல் வதந்தி; சேவை தொடரும்: CMD title=

புதுடெல்லி: ஏர் இந்தியா (Air India) நிறுவனத்தின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான அஸ்வானி லோகானி (Ashwani Lohani) நேற்று (சனிக்கிழமை), ஏர் இந்தியா நிறுவனம் தனது சேவையை நிறுத்தப் போவதாக வெளியான தகவலில் எவ்வித உண்மையும் இல்லை. அது வெறும் வதந்தி என்று தெரிவித்துள்ளார்.

மேலும் "ஏர் இந்தியா நிறுவனம் சேவை நிறுத்தம் அல்லது மூடுவது தொடர்பான செய்திகள் வெறும் வதந்திகள் ஆதாரமற்றவை. ஏர் இந்தியா தொடர்ந்து பறந்து விரிவடையும்" என்று லோஹானி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். 

நாட்டின் விமான சேவையில் இந்தியாவின் மிகப்பெரிய விமான நிறுவனம் ஏர் இந்தியா என்று கூறிய அவர், "பயணிகள், கார்ப்பரேட்டுகள் அல்லது முகவர்கள் வதந்தி குறித்து கவலைப்படத் தேவையில்லை" என்று கூறினார்.

தேசிய விமான சேவை நிறுவனத்தை (Air India)  தனியார்மயமாக்குவது தொடர்பாக மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி (Hardeep Singh Puri), ஏர் இந்தியா தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகளை சந்தித்த ஆலோசனை நடத்தினார். 

அதற்கு முன்பு கடந்த செவ்வாய்க்கிழமை, ஏர் இந்தியா நிறுவனம் சேவை நிறுத்துவது என்பது விருப்பமில்லை. ஆனால் கடனில் மூழ்கியுள்ள ஏர் இந்தியாவை மீட்க வேண்டும் என்றால் தனியார்மயமாக்குவது கட்டாயமாகி விட்டது என்று மத்திய அரசாங்கம் கூறியிருந்தது.

ஏர் இந்தியா மீதான கடனால், அது தொடர்ந்து செயல்பட முடியாது என்ற நிலை உருவாகி உள்ளதாகவும், அதை இயக்குவதற்கு தனியார் கைகளில் செல்ல வேண்டும் என்றும் அமைச்சர் பூரி கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.

Trending News