உங்கள் கூகுள் ஹிஸ்டிரியை யாராவது பார்த்துவிடுவார்கள் என நீங்கள் பயப்படுகிறீர்களா?. கவலையே வேண்டாம் அதற்கும் டெக்னிக்கலாக சில வழிகள் உள்ளன. இப்போதைய சூழலில் ஒருவரின் மொபைலை யார் வேண்டுமானாலும் எடுத்து ஜாலியாக பயன்படுத்துகிறார்கள். இதனால், ஒருவரின் தனிப்பட்ட கூகுள் தேடல்களையெல்லாம்கூட பார்க்க வாய்ப்புகள் உள்ளன. சில டிப்ஸூகளை மட்டும் நீங்கள் பின்பற்றினால், உங்களின் கூகுள் ஹிஸ்டிரியை மிகவும் ரகசியமாக வைத்துக் கொள்ளலாம்.
மேலும் படிக்க | Meta 3D Avatar புதிய முப்பரிமாண மெட்டாவின் அவதாரை உருவாக்குவது சுலபம்
நீங்கள் செய்ய வேண்டியது என்னவென்றால், முதலில் கூகுள் பிரவுசருக்கு செல்லுங்கள். அங்கு பிரவுசரின் வலதுபக்கத்தின் மேல் மூலையில் 3 புள்ளிகள் இருக்கும். இந்த மூன்று புள்ளிகளைக் கிளிக் செய்வதன் மூலம் உங்களுக்கு பல விருப்பங்கள் திறக்கப்படும். அதில் வரலாறு ஆப்சனை நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.
அதனை நீங்கள் கிளிக் செய்தவுடன் மேலே Clear Browsing Data விருப்பம் இருக்கும். அதை நீங்கள் கிளிக் செய்யவும். இப்போது பேஸிக் மற்றும் அட்வான்ஸ் என இரண்டு ஆப்சன்கள் உங்கள் முன் வரும். அதில் ஏற்ற விருப்பங்களை நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டும். அட்வான்ஸை நீங்கள் தேர்தெடுத்தீர்கள் என்றால், குறிப்பிட்ட நேரத்துக்குள் உங்களின் கூகுள் ஹிஸ்டிரி தானாக அழிந்துவிடும்.
மேலும் படிக்க | ரெட்மீ ஸ்மார்ட்போன் வெறும் ரூ.749-க்கு வாங்குவது எப்படி?
அந்தவகையில், நீங்கள் 24 மணிநேரத்திற்கு முன்பு, 7 நாட்களுக்கு முன்பு மற்றும் 4 வாரங்களுக்கு முந்தைய தரவை அழிக்கலாம் தானாகவே அழியுமாறு செய்துவிடலாம். இதன்மூலம் உங்களின் கூகுள் ஹிஸ்டிரியை யாரும் பார்க்க முடியாது. ஓரீரு வாரங்களுக்கு முன்பு நீங்கள் ஏதேனும் உடல்சார்ந்து அல்லது திருணமணத்துக்கு தயாராவது குறித்து நீங்கள் தேடினீர்கள் என்றால், அதனை மற்றவர்கள் பார்த்தால் சங்கடமாக இருக்கும் நீங்கள் எண்ணினால், இப்படியான செட்டிங்ஸை செட் செய்து கொள்ளுங்கள். நீங்கள் மறந்தாலும் டெக்னாலஜி உங்களுக்கு சரியான நேரத்தில் உதவும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR