MakeInIndia திட்டத்தில் 40 ராக்கெட்டுகள் உருவாக்க திட்டம்!

செயற்கைக்கோள்களில் பயன்படுத்தப்படும் சோலார் செல்களை இந்தியாவிலேயே தயாரிக்க இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது!

Last Updated : Jul 29, 2018, 08:07 PM IST
MakeInIndia திட்டத்தில் 40 ராக்கெட்டுகள் உருவாக்க திட்டம்! title=

செயற்கைக்கோள்களில் பயன்படுத்தப்படும் சோலார் செல்களை இந்தியாவிலேயே தயாரிக்க இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது!

செயற்கைக்கோள்களில் பயன்படுத்தப்படும் சோலார் செல்களை இந்தியாவிலேயே தயாரிக்க உள்ளதாவும், இதன்மூலம் இந்தியாவை சேர்ந்த பல்லாயிரம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் உறுவாகும் எனவும் இந்திய விண்வெளி ஆராய்சி அமைப்பின் தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.

இந்திய விண்வெளி ஆராய்சி அமைப்பின் தலைவர் சிவன் அவர்களின் சொந்த ஊரான கன்னியாகுமரி மாவட்டம் சரக்கல்விளையில், ரூ.40 லட்சம் செலவில் நடைபெற்று வரும் பள்ளி கட்டுமான பணிகளை பார்வையிட இன்று அவர் கன்னியாகுமாரி வருகை புரிந்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் இந்த தகவலை தெரியபடத்தியுள்ளார்.

முன்னதாக கட்டுமான பணி நடைப்பெற்று வரும் பள்ளியில் புதிதாக சுற்று சுவர் கட்டித்தரவும், மின் வசதி, கழிவறை வசதி, வர்ணம் பூசுதல், புதிய இருக்கைகள், பூங்கா ஆகிய வசதிகளை ஏற்படுத்தி தரவேண்டும் என அப்பள்ளி தலைம ஆசிரியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சிவன் அவர்கள் தெரிவிக்கையில்... 

மத்திய அரசு மேக் இன் இந்தியா திட்டத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து இத்திட்டத்தின் மூலம் பல வளர்ச்சித் திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.

மேக் இன் இந்தியா திட்டத்தில் இந்திய வின்வெளி ஆராய்ச்சித்துறையும், பல திட்டங்களை செயல்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்த வகையில் மேக் இன் இந்தியா திட்டத்தில் ‘ISRO’ 40 ராக்கெட்டுகளை உருவாக்க திட்டமிட்டுள்ளது. இதில் 30 ராக்கெட்டுகள் PSLV ராக்கெட்டுகளாகவும், 10 ராக்கெட்டுகள் GSLV மார்க்-3 ஆகவும் தயாரிக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் செயற்கைக்கோள்களில் பயன்படுத்தப்படும் சோலார் செல்களை இந்தியாவிலேயே தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் இந்திய இளைஞர்களுக்கு அதிகளவில் வேலை வாய்ப்புகளை உறுவாக்க இயலும்" என தெரிவித்துள்ளார்.

Trending News