ஆகஸ்ட் 3 பள்ளி மாணவர் சேர்க்கை கிடையாது.. வெளியான செய்தி தவறு: பள்ளிக்கல்வித்துறை விளக்கம்

ஆகஸ்ட் 3-ல் அரசு பள்ளி மாணவர் சேர்க்கை தொடங்கும் என வெளியான செய்தி தவறான தகவல் என்று பள்ளிக் கல்வித்துறை விளக்கமளித்துள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jul 24, 2020, 08:40 PM IST
ஆகஸ்ட் 3 பள்ளி மாணவர் சேர்க்கை கிடையாது.. வெளியான செய்தி தவறு: பள்ளிக்கல்வித்துறை விளக்கம் title=

சென்னை: ஆகஸ்ட் 3-ல் அரசு பள்ளி மாணவர் சேர்க்கை தொடங்கும் என வெளியான செய்தி தவறான தகவல் என்று பள்ளிக் கல்வித்துறை விளக்கமளித்துள்ளது. முன்னதாக, இன்று பிற்பகல், தமிழகத்தில் அரசு பள்ளிகளில் ஆகஸ்ட் 3-ஆம் தேதி முதல் மாணவர் சேர்க்கை நடைபெறும் என தமிழக கல்வித்துறை அறிவித்ததாக தகவல் வெளியானது. இது தொடர்பாக சில பள்ளிகளிலும் நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.

மாணவர் சேர்க்கை தொடர்பான செய்தி வெளியான நிலையில், ஆகஸ்ட் 3 ஆம் தேதி அரசு பள்ளி மாணவர் சேர்க்கை தொடங்கும் என வெளியான தகவல் தவறான செய்தி என்றும், மாணவர் சேர்க்கை நடத்துவது தொடர்பாக, இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை என்றும் பள்ளிக் கல்வித்துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது.

மாணவர் சேர்க்கை தொடர்பாக நோட்டீஸ் ஒட்டியுள்ள பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பள்ளிக் கல்வித்துறை எச்சரித்துள்ளது.

 

ஆகஸ்ட் 3 ஆம் தேதி முதல் அரசுப் பள்ளிகளில் பிளஸ் 1 மாணவர் சேர்க்கை நடைபெறும் என வெளியான செய்தி தொடர்பாக விளக்கமளித்த தமிழக பள்ளிக்கல்வித்துறை, ஆகஸ்ட் 3 முதல் பிளஸ் 1 மாணவர் சேர்க்கை என நோட்டீஸ் ஒட்டிய அரசு உதவி பெறும் பள்ளியிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளதாகவும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்தது.

Trending News