Madha Gaja Raja Releasing On Pongal 2025 : விஷால் நடிப்பில் உருவான மத கஜ ராஜா திரைப்படம், 11 ஆண்டுகளுக்கு பிறகு இந்த படம் தற்போது வெளியாக இருக்கிறது.
Madha Gaja Raja Releasing On Pongal 2025 : தமிழ் திரையுலகில் பல படங்கள் எடுக்கப்பட்டு, அப்படியே கிடப்பில் போடப்பட்டு வெளியாகாமல் இருக்கின்றன. அப்படி, வெளியாகாமல் இருக்கும் ஒரு படம் மத கஜ ராஜா. இதில் விஷால் ஹீரோவாக நடித்திருக்கிறார். இவருடன் சேர்ந்து சந்தானம் காமெடி ரோலில் நடித்திருக்கிறார். விஷாலுக்கு ஜோடியாக வரலட்சுமி சரத்குமார், அஞ்சலி உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். இந்த படம், கிட்டத்தட்ட 11 வருடங்களுக்கு முன்பே வெளியானது. அவ்வப்போது தள்ளிப்போடப்பட்ட இந்த ரிலீஸ், ஒரு வழியாக இந்த ஆண்டில் வெளியாக இருக்கிறது.
கோலிவுட்டில், நீண்ட நாட்களாக ரிலீஸ் ஆகாமல் இருக்கும் படம், மத கஜ ராஜா. இந்த படத்தின் ப்ரொடக்ஷன் பணிகள் 2012ஆம் ஆண்டில் தொடங்கி 2013ஆம் ஆண்டில் முடிவடைந்தது.
மத கஜ ராஜா படத்தினை ஜெமினி ஃபிலிம் சர்க்யூட் நிறுவனம் தயாரித்திருந்தது. 10 ஆண்டுகளுக்கு முன்பே வெளியாக வேண்டிய இந்த படம் இப்போது வரை வெளியிடப்படாமல் இருப்பதற்கு காரணம், அந்த தயாரிப்பு நிறுவனம் நிதி ரீதியாக சில சிரமங்களை சந்தித்து வருவதால்தான் எனக்கூறப்படுகிறது.
இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக அஞ்சலி மற்றும் வரலட்சுமி ஆகியோர் நடித்திருந்தனர்.
இப்போது ஹீரோவாக மட்டும் நடித்து வரும் சந்தானம், மத கஜ ராஜா படத்தில் காமெடி கேரக்டரில் நடித்திருக்கிறார்.
இந்த படத்தை வெளியிட தானும் விஷாலும் எவ்வளவோ முயற்சி செய்ததாக சுந்தர்.சி ஒரு பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசியிருந்தார்.
தற்போது ஒரு வழியாக இந்த படம் வெளியாகவுள்ளது. வரும் பொங்கல் பண்டிகையை அடுத்து இப்படம் வெளியாக இருப்பதாக சந்தானமும் விஷாலும் பதிவை வெளியிட்டிருக்கின்றனர்.
தற்போது பொங்கல் ரேஸில் மத கஜ ராஜா படம் இணைந்துள்ள செய்தியை கேட்டதிலிருந்து ரசிகர்கள் குஷியில் உள்ளனர்.