சென்னை மெரினாவில் பாணி பூரி சாப்பிட பெண் திடீர் மரணம்!

சென்னை மயிலாப்பூர் பறக்கும் ரயிலில் திடீரென வாந்தி மயக்கம் 24 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர்  மருத்துவமனை கொண்டுவரும் வழியில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.   

Written by - RK Spark | Last Updated : Apr 3, 2023, 01:00 PM IST
  • பறக்கும் ரயிலில் மயங்கி விழுந்த பெண்.
  • மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் உயிரிழப்பு.
சென்னை மெரினாவில் பாணி பூரி சாப்பிட பெண் திடீர் மரணம்! title=

சென்னை மின்சார ரயிலில் வந்த இளம்பெண்ணிற்கு திடீர் என மயக்கம் ஏற்ப்பட்டவரை மருத்துவமனை கொண்டுவரும் வழியில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.  மெரினா கடற்கரையில் பாணி பூரி, சுண்டல் ,சோளம் ஆகியவற்றை சாப்பிட்ட பிறகு வாந்தி மயக்கம் ஏற்பட்டு உயிரிழந்ததாக நண்பர்கள் கூறியுள்ளனர்.  அதிகம் சாப்பிட்டு பறக்கும் ரயிலை பிடிப்பதற்காக படிகளில் மாறி மாறி வேகமாக போடி ரயிலைப் பிடித்ததால் மூச்சடைப்பு காரணமாக வாந்தி மயக்கம் ஏற்பட்டதாக நண்பர்கள் வாக்குமூலம்.  மெரினா கடற்கரையில் சாப்பிட்டதால் பெண் உயிரிழந்தாரா? மூச்சிரைக்க ஓடி வந்ததால் உயிரிழந்தாரா? என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  

சென்னை மயிலாப்பூர் பறக்கும் ரயிலில் திடீரென வாந்தி மயக்கம் ஏற்பட்ட 24 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரை அந்த நண்பர்களும் பொதுமக்களும் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். ஆனால் அழைத்துச் செல்லும்போது அந்தப் பெண் உயிரிழந்துள்ளார். முதற்கட்ட விசாரணையில் கடலூரைச் சேர்ந்த குரு சந்திரன் என்பவரது மகள் மோனிஷா என்பது தெரிய வந்துள்ளது. இவர் நண்பர்களுடன் சென்னை மெரினா கடற்கரை சென்று விட்டு அங்கு பாணி பூரி சுண்டல் சோளம் ஆகியவற்றை சாப்பிட்டு மீண்டும் திருவல்லிக்கேணி பறக்கும் ரயில் நிலையத்திலிருந்து திருவான்மியூர் நோக்கி  சென்று கொண்டிருந்ததாக தெரிவித்துள்ளனர். திடீரென மயிலாப்பூர் பறக்கும் ரயில் நிலையம் வரும்பொழுது வாந்தி மயக்கம் ஏற்பட்டு கீழே விழுந்ததாக நண்பர்கள் கூறியுள்ளனர். உடனிருந்த தோழி செவிலியர் என்பதால் முதற்கட்ட மருத்துவ உதவி செய்து உடன் இருந்தவர்கள் மூலம் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதாகவும், ஆனால் அழைத்துச் கொண்டு வரும்போது உயிரிழந்துள்ளதாக ராயப்பேட்டையில் பரிசோதனை செய்த மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 

மேலும் படிக்க | மதுரை மாநகராட்சி மேயருக்கு எதிராக திமுக கவுன்சிலர்கள் ஆர்பாட்டம்!

இதனை எடுத்து பிரேத பரிசோதனைக்காக உடல் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.  பறக்கும் ரயிலில் நடந்த விவகாரம் காரணமாக திருவான்மியூர் ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது குறித்து மோனிஷாவின் உறவினர் அசோக் குமார் அவருக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து, சந்தேக மரணம் என்ற அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  சென்னை மெரினா கடற்கரையில் சாப்பிட்ட பானி பூரி, சுண்டல், மற்றும் சோளம் ஆகியவற்றின் காரணமாக உடல் பாதிக்கப்பட்டு மரணம் ஏற்பட்டுள்ளதா என்ற சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  

விசாரணை செய்ததில் பறக்கும் ரயில் நிலையத்தில் பிளாட்பாரம் மாறி சென்றதால், மீண்டும் மூச்சுரைக்க படிகள் இறங்கி ஏறி சரியான பிளாட்பாரத்தில் பறக்கும் ரயிலை பிடித்துச் செல்லும் போது திடீரென மூச்சடைப்பு ஏற்பட்டு வாந்தி மயக்கம் அடைந்ததாக நண்பர்கள் தெரிவித்துள்ளனர். மருத்துவர்களும் முதற்கட்டமாக அதிகளவு உணவு சாப்பிட்டு படிகளில் அவசர அவசரமாக ஓடிவந்தன் காரணத்தினால் மூச்சடைப்பு ஏற்பட்டு இருக்கலாம் என கூறியுள்ளனர். இருப்பினும் அரசு மருத்துவமனையின் முழு பிரேத பரிசோதனை அறிக்கையின் பிறகு மோனிஷா உயிரிழந்ததற்கான காரணம் தெரியவரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க | பாஜக கூட்டணி குறித்து எடப்பாடி பழனிச்சாமி பரபரப்பு பேட்டி!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News