மளிகைக் கடை ஷட்டரை உடைத்து பிஸ்கட், ஹார்லிக்ஸ் சாப்பிட்ட காட்டு யானைகள்

மளிகைக் கடை ஷட்டரை உடைத்து பிஸ்கட், ஹார்லிக்ஸ் சாப்பிட்ட காட்டு யானை   

Written by - நவீன் டேரியஸ் | Last Updated : May 1, 2022, 08:19 PM IST
  • உணவு, தண்ணீரின்றி கிராமங்களுக்குள் படையெடுக்கும் காட்டுயானை
  • மளிகைக் கடை ஷட்டரை உடைத்து பிஸ்கட், ஹார்லிக்ஸ் சாப்பிட்ட யானை
  • சமூக வலைதளங்களில் வைரலாகும் உணவு உண்ணும் வீடியோ
மளிகைக் கடை ஷட்டரை உடைத்து பிஸ்கட், ஹார்லிக்ஸ் சாப்பிட்ட காட்டு யானைகள்  title=

பருவ நிலை மாறுபாடு காரணமாக இந்தாண்டு மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளிலும் வெயில் கொளுத்துகிறது. காட்டில் கோடை வெப்பம் மற்றும் தீப்பிடிப்பு உள்ளிட்ட சம்பவங்களால் கடும் வறட்சி நிலவுகிறது. பெரும்பாலான இடங்களில் தண்ணீர் கிடைக்காமல் விலங்குகள் தவித்து வருகின்றன. மழை இல்லாததால் வனப் பகுதிகளில் ஓடும் சிற்றோடைகள், நீர் வீழ்ச்சிகளும் தண்ணீர் இன்றி காட்சி தருகின்றன. தண்ணீருக்காகவும், உணவுக்காகவும் வழக்கத்தைவிட அதிகளவில் கோடைக்காலத்தில் விலங்குகள் ஊருக்குள் வரும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், விவசாயிகளும், மலைக்கிராம மக்களும் இரவு நேரங்களில் வெளியே செல்லாத நிலையில் உள்ளனர். 

மேலும் படிக்க | Water hunt of Elephants: மேற்கு தொடர்ச்சி மலையில் யானைகளின் தண்ணீர் வேட்டை வைரல்

இந்நிலையில், கோவை மாவட்டம் தடாகம் அருகே ஊருக்குள் புகுந்த காட்டுயானைகள் மளிகைக் கடை ஒன்றின் ஷட்டரை உடைத்து பிஸ்கட் உள்ளிட்ட தின்பண்டங்களை சாப்பிடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பெரிய தடாகம் வனப்பகுதியிலிருந்து  வெளியேறிய 7 காட்டு யானைகள், உணவு மற்றும் தண்ணீர் தேடி இன்று அதிகாலை தண்ணீர்பந்தல் பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் உலா வந்தன. அதில் 3 யானைகள் மளிகைக்கடை ஒன்றின் ஷட்டரை உடைத்து அங்கிருந்த அரிசி, பிஸ்கட், ஹார்லிக்ஸ் உள்ளிட்டவற்றை சாப்பிட்டது. யானைகளை அங்கிருந்தவர்கள் விரட்டியும் அவை செல்லவில்லை. உடனடியாக வனத்துறைக்கு அக்கிராம மக்கள் தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறை ஊழியர்கள், யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டினர். இதனிடையே யானைகள் மளிகை கடை ஷட்டரை உடைத்து உணவுப்பண்டங்களை சாப்பிடுவதை அப்பகுதி வாசிகள் செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவேற்றினர். இந்த காட்சிகள் தற்போது வைரலாகி வருகின்றன. 

மேலும் படிக்க | காட்டின் ‘பெரியவருக்கு’ உரிய மரியாதையைக் கொடுங்கள்.!

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News