எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக முதலமைச்சர் வேட்பாளர் யார்?

அதிமுக முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பதை கட்சித் தலைமையலகம் 7ஆம் தேதியன்று அறிவிக்கும்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 28, 2020, 04:03 PM IST
  • நீட் தேர்வுக்கு எதிர்ப்பு உள்ளிட்ட 15 தீர்மானங்கள் அதிமுக செயற்குழுவில் நிறைவேற்றப்பட்டது...
  • கொரோனா தடுப்பு பணி, மருத்துவப் பணிகள், மறுவாழ்வு பணிகளை சிறப்பாக செய்த தமிழ்நாடு அரசுக்கும், அரசு ஊழியர்களுக்கும், தன்னார்வத் தொண்டர்களும் நன்றியும் பாராட்டும் தெரிவிக்கப்பட்டது...
  • பத்திரிகை மற்றும் ஊடக பணியாளர்களுக்கு நன்றியும் பாராட்டும் தெரிவிக்கப்பட்டது...
எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக முதலமைச்சர் வேட்பாளர் யார்? title=

புதுடெல்லி: எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக முதலமைச்சர் வேட்பாளர் யார்?

அதிமுக முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பதை கட்சித் தலைமையலகம் 7ஆம் தேதியன்று அறிவிக்கும். அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக வேட்பாளர் யார் என்பது எதிர்வரும் அக்டோபர் 7ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி. முனுசாமி தெரிவித்தார்.

கூட்டத்தின் முடிவில் செய்தியாளர்களிடம் பேசிய கே.பி. முனுசாமி, சட்டமன்ற தேர்தலில் அதிமுக வேட்பாளர் என்பது குறித்து வரும் அக்டோபர் 7ஆம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் இணைந்து அறிவிப்பார்கள் என்று தெரிவித்தார்.

தேர்தலுக்கு முன்னதாக, கட்சியை அமைப்பு ரீதியாகவும் மாவட்டம், வட்டாரம் மற்றும் வார்டு அளவில் வலுப்படுத்துவது குறித்தும் இந்தக் கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது.  

சென்னை ராயப்பேட்டையில் இருக்கும் அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று செயற்குழு கூட்டம்  நடைபெற்றது. கட்சியின் அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி, முன்னணி நிர்வாகிகள் உள்பட செயற்குழு உறுப்பினர்கள் பலரும் பங்கேற்றுள்ளனர்.

அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பது குறித்து கடந்த சில வாரங்களாக விவாதங்கள் எழுந்துள்ளன. இந்த நிலையில், இன்று நடைபெற்ற செயற்குழு கூட்டம் சுமார் 5 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்றது.  

11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழுவை அமைக்க வேண்டும் என்றும் வழிகாட்டுதல் குழுவே முதல்வர் வேட்பாளரை தேர்வு செய்ய வேண்டும் என்பது குறித்தும் செயற்குழுவில் விவாதிக்கப்பட்டது.  

 Read Also | ADMK செயற்குழுவில் நீட் தேர்வுக்கு எதிர்ப்பு உள்ளிட்ட 15 தீர்மானங்கள் நிறைவேற்றம்!!

Trending News