தமிழகத்தில் நான் தான் எதிர்க்கட்சியாகச் செயல்படுகிறேன் - சசிகலா

Sasikala: தமிழகத்தில் தான் தான் எதிர்க்கட்சியாக செயல்பட்டு வருவதாக சசிகலா கருத்து தெரிவித்துள்ளார்.  

Written by - Chithira Rekha | Last Updated : Jun 8, 2022, 03:43 PM IST
  • கெடிலம் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த சிறுமிகள்
  • நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சசிகலா
  • நான் தான் எதிர்க்கட்சியாகச் செயல்படுகிறேன் - சசிகலா
தமிழகத்தில் நான் தான் எதிர்க்கட்சியாகச் செயல்படுகிறேன் - சசிகலா title=

சிறையிலிருந்து வெளியே வந்த சசிகலா சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக சிறிது காலத்திற்கு அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்கப்போவதாக  அறிவித்தார். தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து, சசிகலாவை கட்சிக்குள் சேர்க்க வேண்டுமென குரல்கள் எழுந்துள்ளன. சசிகலாவை சந்தித்த ஓபிஎஸ்-சின் தம்பி ஓ.ராஜா கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். 

மேலும், அதிமுக பொது செயலாளர் பதவியிலிருந்து தன்னை நீக்கிய பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்து சசிகலா தொடர்ந்த  வழக்கை நிராகரித்து சென்னை உரிமையியல் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இது சசிகலாவிற்குப் பின்னடைவாக பார்க்கப்பட்டது. இருப்பினும், அவ்வப்போது சசிகலா தனது ஆதரவாளர்களை நேரில் சந்திப்பது, திமுக அரசையும் விமர்சித்து வருகிறார்.

அண்மையில் கடலூரில் கெடிலம் ஆற்றில் குளிக்கச் சென்ற சிறுமிகள் உட்பட 7 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். இதில், இரு சிறுமிகளின் பெற்றோரை இன்று நேரில் சந்தித்து சசிகலா ஆறுதல் கூறினார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், திராவிட மாடல் என திமுக அரசு தற்போது பேசி வருகிறது. ஆனால் அதிமுக ஏற்கனவே திராவிட மாடலை உருவாக்கி சமூக நீதியை செயல்படுத்தி வந்தது எனக் குறிப்பிட்டார். 

மேலும் படிக்க | ஒரு ஊருல ஒரு மடாலயம்... ஜெயலலிதா பாணியில் ஈபிஎஸ்க்கு குட்டிக்கதை சொன்ன சசிகலா

குறிப்பாக, அதிமுக ஆட்சிகாலத்தில் பெண்களுக்காக முக்கியத்துவம் கொடுத்து பல திட்டங்களை சமுக நீதி நோக்கோடு செயல்படுத்தப்பட்டன. பெண்களுக்காக ஒதுக்கப்பட்ட திட்டத்தை ரத்து செய்வது தான் திராவிட மாடலா?.  பாஜக எம்.எல்.ஏ. நயினார் நாகேந்திரன் நான் பாஜகவிற்கு வரவேண்டும் என கோரிக்கை வைத்தது அவருடைய தனிப்பட்ட கருத்து. அவர் கட்சிக்கு நான் வர வேண்டும் என்ற அவரது ஆசையை தெரிவிக்கிறார் வேறு ஒன்றும் இல்லை

நான்தான் எதிர்க்கட்சியாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறேன். இந்த கிராமத்தில் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த சிறுமிகள், கழிப்பறை வசதி இல்லாததால் மாற்று பகுதிக்கு சென்று அங்கு குளித்ததால் தான் பலியாகி உள்ளனர். எனவே இந்தக் கிராமம் முழுவதும் கழிப்பறை வசதியை உடனடியாக ஏற்படுத்தித் தரவேண்டும். 

செவிலியர்களை தேவைக்கு ஏற்ப வேலை வாங்கி விட்டு தற்போது பணி நிரந்தரம் வழங்காமல் இருப்பது வேதனையாக உள்ளது. அவர்களுக்கு  நிரந்தரப் பணி வழங்க வேண்டியது அரசின் கடமை. நடராஜர் கோவில் விவகாரத்தில் அரசு தலையிடக் கூடாது. அது நல்லதல்ல. நீதிமன்ற உத்தரவுப்படி தீட்சிதர்களிடமே  கோயில் இருக்க வேண்டும் என சசிகலா கூறினார். 

மேலும் படிக்க | சசிகலா பாஜக கட்சிக்கு வந்தால் அவரை வரவேற்போம்- நயினார் நாகேந்திரன்

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News