சாதி அவமதிப்பு செய்தார் விஜய் சேதுபதி: நடிகரை தாக்கிய மஹா காந்தி நீதிமன்றத்தில் வழக்கு

நடிகர் விஜய் சேதுபதியை தாக்கிய மகா காந்தி தற்போது, விஜய் சேதுபதி மீது வழக்கு தாக்கல் செய்திருக்கிறார்  

Written by - Malathi Tamilselvan | Last Updated : Dec 5, 2021, 01:23 PM IST
  • நடிகர் விஜய் சேதுபதி மீது வழக்கு
  • விஜய் சேதுபதியை தாக்கியதாக கூறப்பட்டவர் நீதிமன்றத்தில் வழக்கு
  • விஜய் சேதுபதியின் உதவியாளர் மீதும் வழக்கு
சாதி அவமதிப்பு செய்தார் விஜய் சேதுபதி: நடிகரை தாக்கிய மஹா காந்தி நீதிமன்றத்தில் வழக்கு title=

நடிகர் விஜய் சேதுபதியை தாக்கிய மகா காந்தி என்ற நபர் தற்போது, விஜய் சேதுபதி மீது வழக்கு தாக்கல் செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. 

சென்னை சைதாப்பேட்டை 9வது பெருநகர உரிமையியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மனு, விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

சில நாட்களுக்கு முன்னதாக, பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் நடிகர் விஜய் சேதுபதி மீது தாக்குதல் நடத்தியவர் இந்த மகா காந்தி.

அது தொடர்பான  வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. கைது செய்யப்பட்ட மகா காந்தியிடம் போலீசார் விசாரணை நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.  

படபிடிப்புக்கு சென்ற விஜய் சேதுபதி தாக்கப்பட்ட சம்பவத்திற்கு (Vijay Sethupathy attacked) பிரபலங்கள் பலரும் கண்டனம் தெரிவித்தனர். இந்த நிலையில், விஜய் சேதுபதியை தாக்கிய மகா காந்தி என்ற நபர் தற்போது, விஜய் சேதுபதி மற்றும் அவரது உதவியாளர் ஜான்சன் மீது வழக்கு தாக்கல் செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு சம்மன் அனுப்பவும், 294(b),323,500 மற்றும் 506(பி), 323,500 மற்றும் 506 இன் கீழ் வழக்குப் பதிய வேண்டும் என்றும் மனுவில் மகா காந்தி கேட்டுக்கொண்டுள்ளார். 

READ ALSO | நடிகர் விஜய் சேதுபதி தாக்கப்படும் வீடியோ வைரல்

சரி, அப்படி என்னதான் விஜய் சேதுபதி மீது மகா காந்தி புகார் சொல்கிறார்? 2021 நவம்பர் 02 அன்று ஏர் ஏசியா விமானத்தில் இரவு 11.30 மணியளவில் பெங்களூருக்கு சென்றபோது,  தனது பொருட்களை எடுப்பதற்காக கன்வேயர் பெல்ட்டுக்கு சென்றபோது, தான் தமிழ் திரைப்பட நடிகர் விஜய் சேதுபதியை சந்தித்து, வாழ்த்தியபோது, தன்னுடைய ஜாதியை சொல்லி சிறுமைப்படுத்தியதாக மனுவில் குறிப்பிட்டிருக்கிறார் மகா காந்தி. 

தனது ஜாதி, தலைவர் மற்றும் பூர்வீகத்தை சிறுமைப்படுத்தியதால், அது தனக்கு சீற்றத்தை ஏற்படுத்தியதாகவும், பொது இடத்தில் விஜய் சேதுபதியின் கண்ணியத்தை குறைக்க விரும்பாமல், கடுமையாக எச்சரித்துவிட்டு அந்த இடத்தை விட்டு வெளியேறிதாக மகா காந்தி குறிப்பிட்டிருக்கிறார்.

பொருட்களை எடுத்துக் கொண்டு விமான நிலையத்தை விட்டு வெளியேற முயன்றபோது, ​​தன்னை தாக்குமாறு நடிகர் விஜய் சேதுபதி (Vijay Sethupathy), மேலாளர் ஜான்சனிடம் சொன்னதாகவும், அதனால் தான் தாக்கப்பட்டதாகவும் காந்தி கூறுகிறார்.

தன்னை தாக்கிய ஜான்சன், சாகடித்துவிடுவேன் என்று திட்டியதாகவும், இதுபற்றி கேள்வி கேட்கத் துணிந்தபோது, காதில் அறைந்ததாகவும் மனுவில் குற்றம் சாட்டியுள்ளார்.  ​​அதனால் தான் அதிர்ச்சி அடைந்து சிறிது நேரம் தரையில் அமர்ந்துவிட்டதாகவும் காந்தி தெரிவிக்கிறார்.

READ ALSO | விஜய் சேதுபதியை எட்டி மிதித்தால் 1001 ரூபாய் : அர்ஜூன் சம்பத் அறிவிப்பால் சர்ச்சை

ஆனால், சென்னை திரும்பியபோது, தான் விஜய்சேதுபதியை தாக்க முயன்றதாக ஊடகங்களில் செய்திகள் வந்திருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்ததாக மனுவில் கூறப்பட்டுள்ளது. குடிபோதையில் இருந்த நடிகர் விஜய் சேதுபதி தனக்கு எதிராக தரக்குறைவான பேட்டி அளித்ததாகவும், ஆனால் உண்மையில் பொதுமக்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள் முன் தன்னை அவமானப்படுத்தியது நடிகர் சேதுபதி தான் என்று மகா காந்தி தெரிவித்திருத்திருக்கிறார்.

விஜய் சேதுபதியுடனான கசப்பான சம்பவத்திற்குப் பிறகு, காதுகளில் வலி இருந்ததாகவும், பின்னர் 08.11.2021 அன்று மருத்துவரிடம் பரிசோதனைக்காகச் சென்றபோது விஜய் சேதுபதியுடனான சம்பவத்தின்போது, காதில் அடிபட்டதால், செவித்திறன் பாதிப்பு ஏற்பட்டிருப்பது தெரிய வந்திருப்பதாகவும் கூறும் மனுதாரர், அதற்கான மருத்துவ சான்றுகளையும் மகா காந்தி சமர்ப்பித்திருக்கிறார்.

நடிகர் விஜய் சேதுபதியின் செயல் மிகவும் மோசமானது என்றும், தன்னைப் போன்ற அப்பாவி பொதுமக்களைத் தாக்குவது மற்றும் சொந்த நலனுக்காக தனது நற்பெயரை நடிகர் பொதுஇடத்தில் கெடுத்துவிட்டதாகவும் மகா காந்தி தனது புகாரில் தெரிவித்துள்ளார்.

எனவே மாண்புமிகு நீதிமன்றம் தனது புகாரை பதிவு செய்து, வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.  

ALSO READ | விஜய் சேதுபதி படத்தில் கௌதம் மேனன் வில்லன்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News