திருடிய பணத்தை திருப்பி கேட்டதால் சாகடிக்கப்பட்ட லாரி ஓட்டுநர்

திருடிய பணம் மற்றும் செல்போனை திருப்பி கேட்டதால் ஆத்திரமடைந்தவர்கள் ஆட்டோ ஓட்டுநரை கல்லால் அடித்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நண்பர்களே கொலைகாரர்களானது எப்படி ?

Written by - Gowtham Natarajan | Last Updated : May 3, 2022, 01:57 PM IST
  • திருடிய செல்போனை திருப்பி கேட்டதால் ஆத்திரம்
  • லாரி ஓட்டுநரைக் கல்லால் அடித்து கொன்ற நண்பர்கள்
  • கொலையில் வெளிவந்த திடுக்கிடும் தகவல்கள்
திருடிய பணத்தை திருப்பி கேட்டதால் சாகடிக்கப்பட்ட லாரி ஓட்டுநர்  title=

வேலூர் மாவட்டம் அப்துல்லாபுரம் ... விடிந்ததும் ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருக்கும் காட்டுப்பகுதி வழியாக நடந்து சென்றவர்கள் மிரண்டு போயிருக்கிறார்கள். அங்குள்ள முட்புதரில் ஆண் சடலம் ஒன்று கிடந்துள்ளது. பார்த்ததும் பதறிப்போனவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்திருக்கிறார்கள். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த விரிஞ்சிபுரம் போலீசார் இறந்துகிடந்தவரின் உடலை சோதனை செய்திருக்கிறார்கள். 

பேரதிர்ச்சி..!

boopathi murder,பூபதி கொலை, வேலூர் கொலை, வேலூர்  

ஆம், அடித்துக்கொலை செய்து வீசியிருக்கிறார்கள். சடலம் கிடந்த இடத்தை போலீசாரின் பாதுகாப்பு வலையத்திற்குள் கொண்டுவரப்பட்டது. கொலை செய்யப்பட்டவர் குறித்த தகவல்களைச் சேகரித்தனர். அப்போது பல திடுக்கிடும் தகவலகள் வெளிவந்தன. வேலூர் அடுத்த ஒடுங்கத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் லாரி ஓட்டுனர் பூபதி. 40 வயதான பூபதி அப்துல்லாபுரம் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தார். லாரி ஓட்டி, அதில் வரும் வருமானத்தை வைத்து குடும்பத்தை ஓட்டி வந்தவருக்கு அதே பகுதியைச் சேர்ந்தவர்களுடன் கெட்ட சகவாசம் ஏற்பட்டுள்ளது. அதில், அடிக்கடி கூட்டமாக கூடி மது அருந்துவது வழக்கமாக வைத்திருந்தார். 

boopathi murder,பூபதி கொலை, வேலூர் கொலை, வேலூர்

சம்பவத்தன்றும் அதேதான் நிகழ்ந்தது. அதே பகுதியைச் சேர்ந்த ஹரி, பரத் ஆகிய நண்பர்களுடன் சேர்ந்து பூபதி மது அருந்தியிருக்கிறார். அப்போதுதான் பிரச்சினை வெடித்தது. நண்பர்களாக இருந்தாலும் கெட்ட சகவாசத்தில் கூடியதாச்சே.... ஹரியும் பரத்தும் சேர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன்பாக பூபதியின் செல்போன் மற்றும் நான்காயிரம் ரூபாய் பணத்தை திருடியிருக்கிறார்கள். அதுதொடர்பாக மது அருந்தும் போது வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 

boopathi murder,பூபதி கொலை, வேலூர் கொலை, வேலூர்

மேலும் படிக்க | உல்லாசமாக ஊர் சுற்ற வழிப்பறியில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்கள் போலீசில் பிடிபட்டது எப்படி ?

சிறிது நேரத்தில் வாய் சண்டை கைகலப்பாக மாற ஆத்திரமடைந்த ஹரி மற்றும் பிரபு இருவரும் சேர்ந்து பூபதியை சரமாரியாகத் தாக்கியிருக்கிறார்கள். அதில் கீழே கிடந்த கல்லை எடுத்து பூபதியை பலமாக அடிக்க அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்நிலையில், இறந்தவரின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீசார் ஹரி மற்றும் பிரபு ஆகிய இருவரையும் கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். மது போதையில் லாரி ஓட்டுநர் நண்பர்களால் அடித்துக்கொல்லப்பட்ட சம்பவம் வேலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் படிக்க | மாமூல் கேட்டு தொடர்ந்து தொந்தரவு செய்த ரவுடியை வெட்டிய பழக்கடைக்காரர்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News