சீசனுக்கு முன்பே மூடப்படும் வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம்!!

தண்ணீர் பற்றாக்குறை காரணமாக சீசனுக்கு முன்பே மூடப்படும் வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம்!!

Last Updated : Jun 10, 2018, 01:32 PM IST
சீசனுக்கு முன்பே மூடப்படும் வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம்!! title=

தண்ணீர் பற்றாக்குறை காரணமாக சீசனுக்கு முன்பே மூடப்படும் வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம்!!

சென்னையிலிருந்து சுமார் 50 கிமீ தூரத்தில் அமைந்துள்ளது இந்தியாவின் புகழ் பெற்ற பழங்கால பறவைகள் சரணாலயம். இது காஞ்சிபுரம் மாவட்டத்தில் 30 ஹெக்டேர் (74 ஏக்கர்) பரப்பளவில் அமைந்துள்ள பாதுகாக்கப்பட்ட பகுதி தான் வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம். 

இந்த சரணாலயத்தை கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 16-ம் தேதி முதல் திறக்கப்பட்டு பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கபட்டு வருகிறது. தற்போது, இந்த சரணாலயத்தில், போதிய தண்ணீர் இன்றியும், இனப்பெருக்கத்திற்கு பிறகு சுமார் 80 ஆயிரம் பறவைகள் திரும்பிச் சென்றதாலும் வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தை தற்காலிகமாக மூட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மறு அறிவிப்பு வெளிவரும் வரை பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை எனவும் தெரிவித்துள்ளனர். 2017 - 2018ம் ஆண்டில் இருந்து தற்போது வரை, வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்திற்கு ஒரு லட்சத்து 16 ஆயிரத்து 500 பேர் பார்வையிட்டுள்ளனர் எனவும் தெரிவித்துள்ளனர். 

 

Trending News