ஊழல்வாதிகளின் கட்சிக்கு நட்சித்திர பேச்சாளர் கமல்ஹாசன் - வானதி சீனிவாசன்!

Vanathi Srinivasan News: தமிழகம் அமைதி பூங்கா என்று சொல்கிற நிலைமை மாறி கீழ இறங்கி செல்கிறது என்று கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ வானதி சீனிவாசன் பேட்டி அளித்துள்ளார்.    

Written by - RK Spark | Last Updated : Apr 29, 2023, 01:43 PM IST
  • சட்டம் ஒழுங்கு தமிழகத்தில் இருக்கிறதா என்ற ஒரு கேள்வி எழுப்புகிறது.
  • அமைதி பூங்கா என்று சொல்கிற நிலைமை மாறி கீழ இறங்கி செல்கிறது.
  • கோவையில் வானதி சீனிவாசன் பேட்டி.
ஊழல்வாதிகளின் கட்சிக்கு நட்சித்திர பேச்சாளர் கமல்ஹாசன் - வானதி சீனிவாசன்! title=

Vanathi Srinivasan News: ஊழல் கறை படிந்த காங்கிரஸ், திமுகவின் நட்சத்திர பேச்சாளராக மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் உள்ளார் என கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ வானதி சீனிவாசன் பேட்டி அளித்துள்ளார்.  கோவை பந்தய சாலையில் உள்ள கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் முன்பு தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் கோடை கால இலவச நீர் மோர் பந்தலை துவங்கி வைத்து செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர், சட்டம் ஒழுங்கு தமிழகத்தில் இருக்கிறதா என்ற ஒரு கேள்வி எழுப்புகிறது. தமிழகம் அமைதி பூங்கா என்று சொல்கிற நிலைமை மாறி கீழ இறங்கி செல்கிறது.  மாநில அரசாங்கத்தின் தொடர்புடைய நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து தான் கவலைப்படுகிறார்கள்.  கோவையில் 15 நாட்களுக்குள் குடிநீர் பிரச்சனை சரியாகும் என்றார்கள். நடவடிக்கை இல்லை.  மக்கள் நீதி மய்யம் மாற்றத்தை கொண்டு வருகிறோம் என்றார்கள். நான் ஏற்கனவே இந்த தொகுதியில் தோல்வி அடைந்து பணி செய்தேன்.  ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்று திமுக காங்கிரசுடன் இருப்பது என்ன? ஊழல் கரை படிந்த காங்கிரஸ் திமுகவின் நட்சத்திர பேச்சாளர் கமல்.

மேலும் படிக்க | Kamal Haasan: நாடாளுமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி? கமல்ஹாசன் ஆலோசனை

பாஜகவை பொறுத்தவரையில் கோவை மட்டுமின்றி எங்கு போட்டியிட்டாலும் வெற்றி பெறும். பாரதிய ஜனதா கட்சியினுடைய வெற்றி வாய்ப்பு கர்நாடகாவில் பிரகாசமாக உள்ளது. கட்சிக்கு எந்த பின்னடைவும் இல்லை. பாஜகவில் எவ்வளவு பெரிய தலைவர்கள் சென்றாலும் பாதிப்பு வராது. தொண்டர்கள் கட்சியோடு இருக்கிறார்கள்.  உள்துறை அமைச்சர் பிரதமர் பிரச்சாரம் செயல்படுகிறது. கடந்த முறை போல் இல்லாமல் இந்த முறை பாஜக தனி பெரும்பான்மை உடன் வரும்.  தமிழ் தாய் வாழ்த்து விவகாரம் தொடர்பாக  அண்ணாமலை ஏற்கனவே விளக்கம் கொடுத்துவிட்டார். இனி அதனை மீண்டும் நோண்ட வேண்டாம் என்றார்.

அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சி ஆலோசனைக் கூட்டம் கோவையில் நடைபெற்றது. கோவை சின்னியம்பாளையத்தில் நடைபெற்ற கூட்டத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கலந்து கொண்டார்.  கூட்டத்தில் கோவை மற்றும் சேலம் மண்டல நிர்வாகிகள் பங்கேற்றனர். நாடாளுமன்ற தேர்தலுக்குள் பூத் கமிட்டிகளை பலப்படுத்தி கட்சியின் கட்டமைப்பை வலுவாக்க வேண்டும் என கமல்ஹாசன் கட்சி நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தியிருந்த நிலையில், இது தொடர்பாகவும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டுள்ளது. மேலும், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் கூட்டணி முடிவை எடுத்த கமல்ஹாசன் நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி தொடர்பாகவும் இக்கூட்டத்தில் விவாதித்துள்ளதாகவும் தெரிகிறது. 

இதை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமலஹாசன், நாடாளுமன்றத் தேர்தலில் தான் போட்டியிடுவது குறித்து இதுவரை முடிவு எடுக்கப்படவில்லை என்று கூறினார். மீண்டும் கோவையில் போட்டியிடுவீர்களா என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர், நான் போட்டியிட வேண்டும் என்ற எண்ணம் யாருக்கு இருந்தாலும் அவர்களுக்கு எனது  வாழ்த்துக்கள் என்று கூறினார். கமல்ஹாசனை பொறுத்தவரை காங்கிரஸ் மற்றும் திமுக கூட்டணியில் இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. கூட்டணியில் இரண்டுக்கும் மேற்பட்ட தொகுதிகளை கேட்கும் முடிவிலும் அவர் இருப்பதாக அரசியல் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது. 

மேலும் படிக்க | அண்ணாமலை கண்டிக்க வேண்டும்: ஜெயக்குமார் எச்சரிக்கை

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News