வைகோ ஒரு அரசியல் ஞானி. அவருக்கு என் மீது தனி பாசம் உண்டு என திமுக செயல் தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று 16வது நாளாக போராட்டம் நடைபெற்று வருகிறது. இதில் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கலந்து கொண்டு தனது ஆதரவை தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின் கூறியதாவது:-
நெடுவாசல் போராட்டத்தை அரசியலாக்க வேண்டிய அவசியம் திமுகவிற்கு இல்லை. திமுக ஆட்சிக் காலத்தில் மீத்தேன் திட்டத்திற்கு ஆய்வுக்காக மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. இதனை அரசியல் ஞானி வைகோ புரிந்து கொள்ள வேண்டும். வைகோவுக்கு என் மீது தனி பாசம் உண்டு. அதனால் தான் விளம்பரம் தேடுவதற்காகவே வைகோ எனது பெயரை பயன்படுத்தி வருகிறார் என ஸ்டாலின் கூறினார்.
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய அரசு உடனடியாக கைவிட வேண்டும். தமிழக மக்கள் தங்கள் உரிமைகளுக்கு எப்படி ஜனநாயகரீதியாக போராட முடியும் என்பதை இந்தா போராட்டம் மூலம் உலகிற்கு உணர்த்தியிருக்கிறார்கள் எனவும் கூறினார்.
ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய அரசு உடனடியாக கைவிட வேண்டும். மாநில அரசும் இத்திட்டத்திற்கு அனுமதி அளிக்கக் கூடாது. #SaveNeduvaasal
— M.K.Stalin (@mkstalin) March 3, 2017
தமிழக மக்கள் தங்கள் உரிமைகளுக்கு எப்படி ஜனநாயகரீதியாக போராட முடியும் என்பதை #SaveNeduvaasal போராட்டம் மூலம் உலகிற்கு உணர்த்தியிருக்கிறார்கள் pic.twitter.com/slOsOQ8Jnp
— M.K.Stalin (@mkstalin) March 3, 2017
தமிழக சட்டமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்டி நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய அரசு கைவிட தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.
— M.K.Stalin (@mkstalin) March 3, 2017