இந்துத்துவாவை நிலைநாட்ட பிரதமர் செயல்படுகிறார் - சீறும் வைகோ

இந்தியையும் இந்துத்துவா சக்திகளையும் நிலைநாட்ட வேண்டும் என பிரதமர் செயல்பட்டுவருகிறார் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். 

Written by - க. விக்ரம் | Last Updated : Aug 28, 2022, 04:19 PM IST
  • வைகோவின் வாகன ஓட்டுநர் இல்ல திருமண விழா
  • நெல்லையில் இன்று நடந்தது
  • வைகோ கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்
இந்துத்துவாவை நிலைநாட்ட பிரதமர் செயல்படுகிறார் - சீறும் வைகோ title=

மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் ஓட்டுநர் சின்னதுரை இல்ல திருமண விழா நெல்லை புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வைத்து நடைபெற்றது. இதில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ  மணமக்கள் பிரபாகரன் -தனச்செல்வி ஆகியோரை வாழ்த்தி திருமாங்கல்யத்தை எடுத்துகொடுத்து திருமணத்தை நடத்தி வைத்தார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பேசுகையில், “திராவிட மாடல் ஆட்சியை மிக வெற்றிகரமாக முதல்வர் மு க ஸ்டாலின் நடத்தி வருகிறார்.மூன்று லட்சம் பேருக்கு  வேலை வாய்ப்பை உருவாக்கிக் கொடுப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மூன்று நாட்களுக்கு முன்னால் கையெழுத்திட்டுள்ளார். சொல்லாததையும் செய்து வருகிறேன் என முதல்வர் சொல்லி வருவதைப் போல சொல்லாததையும் செய்து காட்டி தமிழக முதலமைச்சர் சாதித்து வருகிறார் .தமிழகத்தில் பொற்கால ஆட்சி நடந்து வருகிறது.

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு பின்னர் சிறந்த ஆட்சி நடைபெற முடியுமா என்ற கேள்விக்கு பதிலாக திராவிட மாடல் ஆட்சி அமைந்துள்ளது.ஆதிக்க சக்திகள் சங்பரிவார் சக்திகள் இந்தியயும்ம் சமஸ்கிருதத்தையும் திணித்து தமிழகத்தை கைப்பற்றலாம் என நினைக்கும் கனவு ஒருபோதும் நிறைவேறாது.இந்தூரில்  75 வது ஆண்டுகால சுதந்திர தின விழாவை முன்னிட்டு சங்பரிவார் அமைப்பு சார்பில் நடத்தப்பட்ட  ஊர்வலத்தில் மகாத்மா காந்தியை சுட்டுக்கொன்ற கோட்சேவின் உருவத்தை வைத்து கோட்சே வாழ்க என்று கோஷம் எழுப்பப்பட்டது. இதனை விட கொடுமை வேறு எங்கும் இருக்காது.இந்த நிகழ்வை உலகம் என்னவாக நினைக்கும்.

மேலும் படிக்க | குடிநீர் குழாய் உடைந்து பள்ளிக்குள் தண்ணீர் புகுந்ததால் பள்ளி பூட்டப்பட்ட அவலம்!

நாட்டின் பல தலைவர்கள்  தங்களுக்கு வழிகாட்டும் தலைவராக மகாத்மா காந்தியை ஏற்றுக்கொண்டனர்.மனித குலத்திற்கு வழிகாட்டும் தலைவராக இருக்கும் மகாத்மா காந்தியை சுட்டுக்கொன்ற கொடியவருக்கு விழா எடுக்கும் கூட்டம் சங்பரிவார் அமைப்பு. தமிழகம் உள்ளிட்ட பகுதிகளை ஒட்டுமொத்தமாக கைப்பற்றி இந்தி சமஸ்கிருதம் உள்ளிட்டவைகளை கொண்டு வந்து திணித்து மாநில உரிமைகளை சிதைக்க வேண்டும் என்பதே ஆகும்.பல்வேறு தேசிய இனங்களைக் கொண்ட நாடு இந்தியா., நாடாளுமன்றத்தில் உரையாற்றும்போது யுனைடெட் ஸ்டேட்ஸ் ஆஃப் இந்தியா என அழைக்கப்பட வேண்டும் என தெரிவித்திருந்தேன்.

திராவிட இயக்க சக்திகள் தமிழ் உணர்வு கொண்டவர்கள் வீறு கொண்டு எழுந்து திராவிட இயக்க கோட்டையை பாதுகாக்க வேண்டும்.திராவிட ஆட்சிக்கு அரணாக இருப்பது மட்டுமல்லாமல் இந்துத்துவா சக்திகளை முறியடிக்க வேண்டும்.திராவிட இயக்க சக்திகளின் உணர்வுகளால் தான் இந்துத்துவ சக்திகள் தமிழகத்தில் கால் எடுத்து வைக்க முடியவில்லை.தமிழகத்தில் கால் எடுத்து வைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பாஜகவினர் தினம் தோறும் அறிக்கை பேட்டி உள்ளிட்டவைகளை கொடுத்து வருகின்றனர்.

மேலும் படிக்க | ஓபிஎஸ்ஸின் சித்துவிளையாட்டில் ஜெயலலிதாவே தப்பவில்லை - ஆர்.பி. உதயகுமார்

திராவிட மாடல் ஆட்சி என்பது ரத்தம் சிந்தி உருவாக்கப்பட்ட கோட்டை என்பதை மறந்து விட்டார்கள்.,ஆள் பிடித்துக் கொண்டு வந்து திராவிட இயக்கத்தை விமர்சிப்பதும் தமிழ் நாடு என்ற உணர்வை மழுங்கடிக்கும் முயற்சி ஈடுபட்டிருக்கிறார்கள்.பிரதமர் சாதுரியமானவர் மகா கெட்டிக்காரர், தமிழகத்திற்கு வந்தால் திருவள்ளுவரை பாரதியாரைப் பற்றி பேசுகிறார் வடக்கே சென்றால் ஹிந்தியில் பேசுகிறார்.இந்தியயும் இந்து துவா சக்திகளையும்  நிலைநாட்ட பிரதமர் செயல்படுகிறார்” என்றார்.

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News