கொரோனா அச்சுறுத்தல் குறைந்த நிலையில், ஒமிக்கிரான் பரவல் மிகப்பெரிய பீதியை மக்களிடையே ஏற்படுத்தியுள்ளது. மிகவும் வேகமாக பரவக்கூடிய இந்த வைரஸ், ஐரோப்பிய நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரஸில் இருந்து மக்களை பாதுகாக்கும் நோக்கில் மத்திய, மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முடுக்கவிட்டுள்ளனர். விமான நிலையங்களில் கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ள மத்திய அரசு, வெளிநாட்டு பயணிகள் அனைவருக்கும் ஒமிக்கிரான் மற்றும் கொரோனா பரிசதோனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. வைரஸ் அறிகுறி இல்லை என்றாலும் 14 நாட்கள் தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு கண்டிப்பாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ALSO READ | கல்லூரிகளில் கலை நிகழ்ச்சிகள் நடத்த தடை - தமிழக அரசு உத்தரவு
இந்நிலையில், சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழக விடுதியில் 9 மாணவர்களுக்கு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அதில், கல்லூரிகளில் எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் பின்பற்ற வேண்டிய கொரோனா வழிமுறைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இந்த ஆலோசனைக் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத மாணவர்களுக்கு கல்லூரிக்கு வருவதற்கு அனுமதியில்லை எனத் தெரிவித்தார்.
மேலும், கல்லூரிகளில் கலை நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், விடுதிகளில் இருக்கும் மாணவர்கள் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுவதற்கும் அனுமதி இல்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். இந்தக் கூட்டத்தில் தமிழக சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ALSO READ | ஆன்லைன் காதலா? அப்பா பார்த்த மாப்பிள்ளையா? சென்னை பெண்ணின் முடிவால் பரபரப்பு !!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR