”திமுகவின் அடுத்த தலைவர் உதயநிதி ஸ்டாலின்” - பேரவையில் புகழ்ந்து தள்ளும் எம்.எல்.ஏ-க்கள்

சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏ-வும் முதல்வர் மு.க.ஸ்டாலினின் மகனுமான உதயநிதி ஸ்டாலினை சட்டப்பேரவையில் திமுக எம்.எல்.ஏ-க்கள் இடைவெளி இல்லாமல் புகழ்ந்து தள்ளுகிறார்கள்.

Written by - Nowshath | Edited by - அதிரா ஆனந்த் | Last Updated : Mar 21, 2022, 08:16 PM IST
  • திமுக-வின் அடுத்த தலைவர் உதயநிதி ஸ்டாலின்
  • பேரவையில் திமுகவினர் உதயநிதியை பாராட்டி பேச்சு
  • திமுக-வில் அதிர்ச்சியும் ஆதரவும்
”திமுகவின் அடுத்த தலைவர் உதயநிதி ஸ்டாலின்” - பேரவையில் புகழ்ந்து தள்ளும் எம்.எல்.ஏ-க்கள் title=

திமுக ஆட்சியின் முதல் முழு பட்ஜெட் கூட்டத்தொடர் தலைமை செயலகத்தில் நடைபெற்று வருகிறது. இதில் ஒவ்வொரு தொகுதி எம்.எல்.ஏவும் தங்களது தொகுதியின் தேவைகள் குறித்து பேசி வருகிறார்கள். அப்போது பேசத் தொடங்கும்போது உதயநிதி ஸ்டாலினை அளவுக்கு அதிகமாக புகழ்ந்து வருகிறார்கள்.

பால்வளத் துறை அமைச்சர் நாசர் சட்டப்பேரவையில் பேசும்பொழுது சேப்பாக்கத்தில் தோனியை மிஞ்சியவர் உதயநிதி ஸ்டாலின் என்று பேசினார். பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பேசுகையில் ஒற்றை செங்கலை வைத்து செங்கோட்டையை அதிர செய்தவர் உதயநிதி என்று பாராட்டி பேசினார்.

மேலும் படிக்க | மேகதாது விவகாரத்தில் தோற்றால் வருங்காலம் நம்மை சபிக்கும்..உணர்ச்சிவசப்பட்ட துரைமுருகன்

விட்டுவசதி வாரிய அமைச்சர் முத்துசாமி பேசுகையில், “சட்டமன்ற உறுப்பினர்கள் எப்படி செயல்பட வேண்டும் என்பதற்கு உதாரணமாக உதயநிதி ஸ்டாலின் திகழ்கிறார்” என்று பேசினார். இதேபோல கடந்த கூட்டத்தில் பொதுப்பணித் துறை அமைச்சர் எவ வேலு, “அண்ணா கலைஞர் வழியில் திராவிட கருத்துகளை திரைப்படங்களில் எடுத்துக் கூறியவர் உதயநிதி” என்றார்.

மேலும் படிக்க | ”எனக்கு எதுவுமே தெரியாது” - ஜெயலலிதா சிகிச்சை குறித்து ஓபிஎஸ்

இதனைத் தொடர்ந்து இன்று சட்டப்பேரவையில் பேசிய காஞ்சிபுரம் தொகுதி எம்.எல்.ஏ எழிலரசன், “திமுகவின் அடுத்த தலைவர் உதயநிதி ஸ்டாலின்” என்று தனது பேச்சை தொடங்கினார். திமுக தலைவராக முதல்வர் முக ஸ்டாலின் இருக்கும்போதே இப்படி பேசுகிறாரே என்று சலசலப்பு ஏற்பட்டாலும் பலர் மேஜையை தட்டி ஆதரவு தெரிவித்தனர்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News