Chennai Police Fight CCTV Video: சென்னை தாம்பரம் அடுத்த பதுவஞ்சேரியில் உள்ள அர்ச்சனா பவன் என்ற சைவ உணவகத்தில் கடந்த பிப். 14ஆம் தேதி இரவு, தாம்பரம் ஆயுதபடையை சேர்ந்த காவலர்கள் இரண்டு பேர், மப்டியில் சாப்பிடுவதற்காக சென்றுள்ளனர். அப்போது, அவர்கள் மது போதையில் சென்றதாகவும் கூறப்படுகிறது,
சைவ உணவகமான அதில், அவர்கள் தங்களுக்கு சிக்கன் பிரைட் ரைஸ் வேண்டும் என்று கேட்டுள்ளனர். அதற்கு அங்கிருந்த ஊழியர்கள் இது சைவ உணவகம் என்றும் அசைவம் கிடையாது என்றும் கூறியுள்ளனர். இருரப்பினும் தங்களுக்கு எக் பிரைட் ரைஸ் வேண்டும் என்றும், முட்டை சைவத்தில்தான் அடங்கும் என்றும் அந்த காவலர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டுவந்ததாக தெரிகிறது.
CCTV Video: சைவ கடையில் 'சிக்கன் ரைஸ்' கேட்டு சண்டை போட்ட 'மப்டி' போலீஸ்!
இடம்: அர்ச்சனா பவன், பதுவஞ்சேரி, தாம்பரம். pic.twitter.com/bTGJhD6bt7
— NG Sudharsan (@NgSudharsan07) February 20, 2023
ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றியதால் ஆயுதபடை போலீசாருக்கும், கடை ஊழியர்களுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டதில் இருதரப்பினரும் சரமாரியாக தாக்கி கொண்டுள்ளனர். தொடர்ந்து கடை ஊழியர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். பின்னர், தகராறில் ஈடுபட்ட ஆயுதப்படை காவலர்களை போலீசார் காவல் நிலையம் அழைத்துச்சென்றனர். அங்கு காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்து இரண்டு காவலர்களை விடுவித்ததாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் குறித்தான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏறடுத்தியுள்ளது. மேலும் சம்பவத்தில் ஈடுபட்ட இரண்டு ஆயுதப்படை காவலர்கள் மீதும் தாம்பரம் காவல் ஆணையகரம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
மேலும் படிக்க | ஈரோடு காங்கிரஸ் வெற்றி டெல்லிக்கு கேட்கனும்: ப.சிதம்பரம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ