’ஆளுநர் ஒரு மூக்கணாங்கயிறு’ டிடிவி தினகரனின் திடீர் பாய்ச்சல்

தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி ஒரு மூக்கணாங்கயிறு கயிறு போல் செயல்படுகிறார் என டிடிவி தினகரன் கூறியிருக்கிறார்.   

Written by - S.Karthikeyan | Last Updated : Oct 30, 2022, 08:13 PM IST
  • தமிழகத்தில் தீவிரவாதம் அதிகரித்துள்ளது
  • ஆளுநர் மூக்கணாங்கயிறுபோல் செயல்படுகிறார்
  • டிடிவி தினகரன் திமுக மீது கடும் சாடல்
’ஆளுநர் ஒரு மூக்கணாங்கயிறு’ டிடிவி தினகரனின் திடீர் பாய்ச்சல் title=

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தியையொட்டி, அங்கு சென்ற அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழக அரசு மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோரை சாடினார். கூடுதலாக தமிழக ஆளுநர் ஆர்என்.ரவி ஒரு மூக்கணாங் கயிறு என கூறியிருக்கிறார்.

மேலும் படிக்க | தென்னகத்து போஸ் முத்துராமலிங்க தேவர் - மு.க. ஸ்டாலின் ட்வீட்

அந்த செய்தியாளர் சந்திப்பில், " தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சந்து சிரிக்கும் நிலையில் உள்ளது. இதே நிலை தொடர்ந்தால் திமுக ஆட்சி மக்களால் வீட்டுக்கு அனுப்பப்படும். 2017இல் இபிஎஸ் ஓபிஎஸ்ஐ யார் இணைத்து வைத்தார்களோ அவர் மனது வைத்தால் தான் அதிமுக ஒன்றிணையும். அதிமுக என்பது வேறு ஒரு கட்சி அது பற்றி கருத்து கூற நான் விரும்பவில்லை.

எடப்பாடி பழனிசாமியின் ஆட்சிக்கும் மு.க ஸ்டாலின் ஆட்சிக்கும் பெரிய மாற்றம் ஏதும் இல்லை. இது விடியல் ஆட்சியில்லை, அதை முதல்வரே கண்டு பயப்படும் அளவிற்கான  ஆட்சியாக இருக்கிறது. ஆளுநர் ஆர் எம் ரவி ஓர் முக்கணாங் கயிறு போல செயல்படுகிறார். அவர் இல்லை என்றால் திமுகவின் அராஜகம் அதிகரித்து விடும்.பாஜகவிற்கு ஆதரவாக நான் இந்த கருத்தை தெரிவிக்கவில்லை. தமிழகத்தில் திமுக ஆட்சியில் தீவிர வாதம் அதிகரித்து உள்ளது. இதே நிலை தொடர்ந்தால் 1991 ஜனவரியின் நிலை மீண்டும் உருவாகும்" என்றார்.

மேலும் படிக்க | தமிழகத்தில் தான் அம்பேத்கர் சிலைக்கு அவமரியாதை நடக்கிறது: திருமாவளவன் வருத்தம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News