தேனி: நானும் ஓ பன்னீர்செல்வம் ஒன்று இணைந்திருப்பது அதிமுகவை மீட்டு அதிமுக தொண்டர்களிடம் கொண்டு போய் சேர்ப்பதற்காக தற்போது இரட்டை இலையை எதிர்த்து போட்டியிட்டு ஜெயித்தால்தான் அதிமுகவை மீட்க முடியும் என்றும் தோல்வி பயத்தில் தங்க தமிழ்ச்செல்வன் உளறுகிறார் அவருக்கெல்லாம் பதில் கூற முடியாது என்றும் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்ய வந்த டிடிவி தினகரன் செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.
தேனி மக்களவைத் தொகுதி பாஜக கூட்டணியில் உள்ள அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் வேட்பாளராக அக்கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் போட்டியிடுகிறார். அவர் தனது வேட்பு மனு தாக்கல் செய்வதற்காக தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்திருந்தார் மாவட்ட ஆட்சியர் வளாகம் முன்பாக அவருடைய வாகனம் வந்த பொழுது அவருடன் சேர்ந்து நூற்றுக்கணக்கான அவருடைய தொண்டர்கள் வந்திருந்தனர்
வளாகத்தில் முன்பாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட காவல்துறையினர் வாகனத்தை தடுத்து நிறுத்தி, வாகனத்தில் உள்ள கட்சி கொடியினை அகற்ற உத்தரவிட்டனர். வாகனம் உள்ளே செல்ல முற்பட்ட பொழுது அக்கட்சி தொண்டர்களும் உள்ளே செல்ல முற்பட்டதால், காவல்துறையினருக்கும் கட்சித் தொண்டர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது
சுமார் பத்து நிமிடங்களுக்கு மேல் ஏற்பட்ட இந்த தள்ளுமுள்ளுவால், டிடிவி தினகரன் மனுதாக்கல் செய்வதில் தாமதம் ஏற்படுத்தியது. என்னைத் தொடர்ந்து அவருடைய வாகனத்தை உள்ளே அனுமதித்த காவல்துறையினர் பக்கவாட்டில் தொங்கிய நபர்கள் கேட்டில் மோதி கீழே விழுந்தனர். வாகனத்தில் அதிக நபர்கள் இருந்ததால், பக்கவாட்டில் தொங்கிய நபர்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டு வாகனமானது அனுமதிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து வாகனத்தில் வந்த டிடிவி தினகரன் மற்றும் தற்போதைய எம்பி ஒ பி ரவீந்திரநாத் ஒன்றிணைந்து மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்ய சென்றனர்
இதற்கு முன்னதாக முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் மாவட்ட ஆட்சியர் வளாகத்திற்கு 30 நிமிடத்திற்கு முன்பாகவே வந்து காத்திருந்தார். ஆனால், வேட்பு மனு தாக்கல் செய்ய அவர் செல்லவில்லை. சுமார் 2.40 மணியளவில் வேப்பமடுவை டிடிவி தினகரன் தாக்கல் செய்தார்
வேட்பு மனுவைத் தாக்கல் செய்ய இறுதி நாளான இன்று, கடைசி 20 நிமிடங்களுக்கு முன்பாக டிடிவி தினகரன் வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன், 14 வருடம் கழித்து தேனி மக்களவையில் போட்டியிடுகிறேன் தற்போதும் எனக்கு சிறப்பான வரவேற்பு இருக்கிறது என்று தெரிவித்தார்.
நானும், ஓ பன்னீர்செல்வம் ஒன்று இணைந்திருப்பது அதிமுகவை மீட்டு அதிமுக தொண்டர் வசம் கொண்டு போய் சேர்ப்பதற்காக தற்போது இரட்டை இலையை எதிர்த்து போட்டியிட்டு ஜெயித்தால்தான் அதிமுகவை மீட்க முடியும் என்று தெரிவித்தார்.
இந்த தேர்தலானது பிரதமருக்கான தேர்தல் என்றும், தங்களுக்கு என்ன தேவை என்பதை மக்கள் அவரிடம் கேட்டு பெற முடியும் மோடி தான் பிரதமர் என்ற எதார்த்த உண்மையை கூறுகிறேன் என்று, டிடிவி தினகரன் தெரிவித்தார்.
மேலும் படிக்க - Zee News தேர்தல் கருத்துக்கணிப்பு: மோடி vs ராகுல்... அரியணை ஏறப்போவது யார்?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ