தமிழகத்தின் உள்மாவட்டங்களில் வெயில் இயல்பை விட 3-4 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது!!
வடக்கு உள் கர்நாடகாவில் இருந்து குமரிக்கடல் வரை வளிமண்டலத்தில் காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. வெப்பச்சலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது.
வெப்ப நிலையை பொருத்த வரை உள் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் 3 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை இயல்பை விட அதிகமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையை பொறுத்த வரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும், அதிகபட்ச வெப்பநிலையாக 37 டிகிரி செல்சியஸ் குறைந்தபட்ச வெப்பநிலையாக 25 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.