அமைச்சர் நேருவின் சகோதரர் ராமஜெயம் கடந்த 2012 ஆம் ஆண்டு காலையில் வாக்கிங் செல்லும்போது கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கை திருச்சி போலீசார் விசாரித்து வந்த நிலையில் தற்போது சிபிசிஐடி போலீசார் விசாரணையை நடத்தி வருகின்றனர். குறிப்பாக ராமஜெயம் கொல்லப்பட்டதில் இருந்து கிட்டத்தட்ட 9 ஆண்டுகள் அதிமுக ஆட்சி என்பதால் இவ்வழக்கில் பெரிதாக அரசு அக்கறை காட்டவில்லை என்ற திமுகவின் குற்றச்சாட்டு ஒருபுறம் இருக்கும் நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த திமுக இந்த வழக்கை தற்போது துரிதப்படுத்தி வருகிறது. கொலையாளிகள் என சந்தேகிக்கப்படும் சிலரை சிபிசிஐடி போலீசார் சரித்து வருகின்றனர்.
மேலும் படிக்க | மாணவர்களுக்கு அலெர்ட் கொடுத்த அண்ணா பல்கலை., துணை வேந்தர் - என்ன விஷயம்?
கடந்த மே இரண்டாம் தேதி காணாமல் போனதாக சொல்லப்பட்ட நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் நான்காம் தேதி அவரது வீட்டிற்கு அருகிலேயே இருக்கக்கூடிய அவருக்கு சொந்தமான தோட்டத்தில் எரிந்த நிலையில் ஜெயக்குமாரின் உடலானது மீட்கப்பட்டது. முதலில் சந்தேகத்துக்கிடமான மரணம் என வழக்கு பதிவு செய்த போலீசார் பிரேத பரிசோதனைக்கு பின்பு கொலை வழக்காக மாற்றி பதிவு செய்து 9 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் தான் ராமஜெயம் மற்றும் ஜெயக்குமார் இருவரின் கொலைகளும் ஒரே மாதிரியான சில ஒற்றுமைகளை இருப்பதை போலீசார் உறுதிப்படுத்தி உள்ளனர். குறிப்பாக ராமஜெயம் கொலையில் ஈடுபட்ட அதே கொலையாளிகள் அல்லது அந்த குழுவில் இருந்த ஒருவர் ஜெயக்குமார் கொலையிலும் அவருக்கு தொடர்பு இருக்கலாம் என சந்தேகிக்கின்றனர்.
ராமஜெயம் கொலை செய்யப்பட்டு ஒரு புதரில் வீசப்பட்டிருந்த போது அவரது கை கால்கள் அட்டைப்பெட்டி ஒட்டும் டேப் மற்றும் கம்பிகளால் கட்டப்பட்டிருந்தது வாயில் துணி வைத்து அடைக்கப்பட்டு இருந்தது. அதேபோல அவரது உடலை எரிக்கும் முயற்சியும் நடைபெற்றிருந்தது. தற்போது நடைபெற்று இருக்கும் ஜெயக்குமாரும் கொலையும் அதே பாணியில் கை மற்றும் கால்கள் கம்பிகளால் கட்டப்பட்டிருக்கிறது. பாத்திரம் கழுவுவதற்கு பயன்படுத்தக் கூடிய கம்பி அவரது வாயில் திணிக்கப்பட்டு இருக்கிறது. மேலும் அவரது உடல் எரிக்கப்பட்டு இருக்கிறது.
இந்த இரு கொலைகளிலும் சில ஒற்றுமைகளை தனிப்படை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். கிரைம் சீன் என போலீசார் சொல்லக்கூடிய கொலை நடந்த விதம் கொலை நடந்த இடத்தில் கிடைக்கக்கூடிய பொருட்கள் போன்ற சில விஷயங்கள் இரு கொலைகளிலும் கிட்டத்தட்ட போவதாகவே உள்ளதாக போலீசார் கருதுகின்றனர். ஜெயக்குமாரை கொன்ற கொலையாளிகளை காவல்துறை பிடிக்கும் பட்சத்தில் பல ஆண்டுகளாக மர்மமாக இருக்கக்கூடிய ராமஜெயம் கொலை வழக்கிலும் முடிவு தெரியும் என போலீசார் நம்புகின்றனர்.
மேலும் படிக்க | கள்ளக்குறிச்சி : கல்லூரி ஆண்டு விழாவில் பஞ்ச் டையலாக் பேசிய நடிகர் பாலா
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ