மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு ‘பேட்டரி டார்ச் லைட்’ சின்னம் ஒதுக்கீடு: EC

கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு பேட்டரி டார்ச் லைட் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது!!

Last Updated : Mar 10, 2019, 10:37 AM IST
மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு ‘பேட்டரி டார்ச் லைட்’ சின்னம் ஒதுக்கீடு: EC title=

கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு பேட்டரி டார்ச் லைட் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது!!

மக்களவை தேர்தல் நெறுங்கி வரும் நிலையில் கட்சிகளுக்கு சின்னம் ஒதுக்குவதில் தேர்தல் ஆணையம் தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு டார்ச் லைட் சின்னத்தை ஒதுக்கியுள்ளது தேர்தல் ஆணையம். இதனால் டார்ச் லைட் சின்னத்தில் வரும் மக்களவைத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி போட்டியிடுகிறது.

மக்கள் நீதி மய்யம் சார்பில் 3 சின்னங்கள் பரிந்துரை செய்யப்பட்டிருந்தன. துடைப்பம், டார்ச் லைட் சின்னம் ஒரே போல் இருந்ததால் சுயேச்சை சின்ன பட்டியலில் இருந்து கடந்த தேர்தலில் டார்ச் லைட் சின்னம் தேர்தல் ஆணையத்தால் நீக்கப்பட்டிருந்தது. மக்களவை தேர்தலுக்கான தேதி இந்த வாரத்திற்குள் அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளது.

இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு பேட்டரி டார்ச் சின்னம் ஒதுக்கிய தேர்தல் ஆனையத்திற்கு நன்றி தெரிவித்துள்ளார் க்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன். 

 

Trending News