மக்களுக்கு குட் நியூஸ்: தக்காளி விலை அதிரடி குறைவு..! ஒரு கிலோ இவ்வளவு ரூபாய்தானா..?

Tomato Price In Tamilnadu Today: தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் தக்காளியின் விலை படிப்படியாக குறைந்து வருகிறது. 

Written by - Yuvashree | Last Updated : Aug 12, 2023, 09:24 AM IST
  • தக்காளி விலை அதிரடி குறைவு.
  • சில நாட்களுக்கு முன்பு வரை கிலோ 200 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
  • இன்று இதன் விலை சர்ரென கீழே விழுந்துள்ளது.
மக்களுக்கு குட் நியூஸ்: தக்காளி விலை அதிரடி குறைவு..! ஒரு கிலோ இவ்வளவு ரூபாய்தானா..? title=

தமிழகத்தை பொறுத்தவரை, தக்காளியின் விலை அதன் வரத்தை பொறுத்து ஏறுவதும் இறங்குவதுமாய் உள்ளது. சில நாட்களுக்கு முன்பு வரை தக்காளியின் விலை கிலோவிற்கு ரூபாய் 200-ஐ தாண்டி விற்பனை செய்யப்பட்டது. இன்று இருக்கும் தக்காளி விலை நாளை இருப்பதில்லை என்பதால் மக்கள் அவதியுற்று வந்தனர். கடந்த சில தினங்களாக தக்காளியின் விலை பல்வேறு பகுதிகளில் படிப்படியாக குறைந்து வருகிறது. முதல் தரம், இரண்டாம் தரம் மற்றும் மூன்றாம் தரங்களை பொருத்து தக்காளியின் விலையில் மாற்றங்கள் ஏற்படுகின்றது. 

தக்காளி விலையின் இன்றைய நிலவரம்:

இந்த வாரத்தின் தொடக்கத்தில் சென்னையில் உள்ள கோயம்பேடு சந்தையில் தக்காளி, கிலோ ஒன்றிற்கு 90 ரூபாயாக விற்கப்பட்டது. முன்னர் இருந்ததை விட, தக்காளியின் வரத்து தற்போது அதிகரித்துள்ளதால் அதன் விலை தற்போது படிப்படியாக குறைந்துள்ளது. இதுதான் இந்த விலை மாற்றத்திற்கு காரணம் என காய்கறி வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். நேற்று முன்தினம் 700 டன் தக்காளி மட்டுமே கோயம்பேடு சந்தைக்கு வந்திறங்கிய நிலையில், நேற்று அதன் வரத்து 750 டன்னாக அதிகரித்துள்ளது. இதனால் சில்லறை விற்பனையில் ஒரு கிலோ தக்காளி 70 ரூபாய்க்கு நேற்று விற்கப்பட்டது. இன்று இதன் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. 

மேலும் படிக்க | வீரப்பனை பார்த்து கை காலெல்லாம் சிலிர்த்து போச்சு - சிவசுப்ரமணியம்

இன்று சில்லறை விற்பனையில் ஒரு கிலோ தக்காளி 70 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. கர்நாடகா, ஆந்திரா ஆகிய பகுதிகளில் தக்காளி விளைச்சல் அதிகரித்துள்ளதால் கோயம்பேட்டிற்கு தக்காளி வரத்து அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். மொத்த விற்பனையில், தக்காளி கிலோவிற்கு 50 ரூபாய்க்கு விற்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

விலை மேலும்  குறைய வாய்ப்பு:

தமிழகத்திற்கு தக்காளியின் வரத்து கடந்த சில வாரங்களாக பாதிக்கப்பட்டது. இதற்கு மழை, வெள்ளம், பூச்சி பிரச்சனை போன்றவை காரணங்களாக கூறப்பட்டன.  தமிழகம் மட்டுமன்றி நம் அண்டை மாநிலங்களிலும் இந்தியாவின் பல்வேறு இடங்களிலும் தக்காளிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. அதனால், இதன் விலை தொடர்ந்து உச்சியில் இருந்து வந்தது. தற்போது அந்த நிலை சீர் செய்யப்பட்டுள்ளதால் படிப்படியாக விலை குறையும் என கூறப்படுகிறது. கோயம்பேடு சந்தைக்கும் கடந்த சில நாட்களாக காய்கறிகளின் வரத்து அதிகரித்து காணப்படுவதால், கண்டிப்பாக தக்காளியின் விலை குறையும் என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். 

காய்கறி விலை நிலவரம்:

கோயம்பேட்டில் இன்று தக்காளி மட்டுமன்றி வேறு சில காய்கறிகளின் விலைகளிலும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. அதன் முழு விவரம், இதோ. 

>பெரிய வெங்காயம் கிலோ ஒன்றிற்கு சுமார் 25 ரூபாயாகவும் சின்ன வெங்காயம் ஒரு கிலோ 80ரூபாயாகவும் விற்கப்படுகிறது. 

>அவரைக்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. பீட்ரூட் ஒரு கிலோ 45 ரூபாய்க்கும்  கத்திரிக்காய் ஒரு கிலோ 40  ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. 

>கேரட் ஒரு கிலோவுக்கு 45 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. பீன்ஸ் ஒரு கிலோவிற்கு 50 ரூபாய் குறைந்து 50 ரூபாயாக விற்கப்டுகிறது.  பல நாட்களுக்கு பிறகு இதன் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. 

>சிறிய உருளைக்கிழங்கு கிலோவுக்கு 60 ரூபாயாகவும் பெரிய உருளைகிழங்கு ஒரு கிலோவுக்கு 3 ரூபாய் குறைந்து 30 ரூபாயாகவும் விற்கப்படுகிறது. 

>பச்சை குடைமிளகாய் ஒரு கிலோவுக்கு 50 ரூபாய்க்கும் சிகப்பு குடைமிளகாய் கிலோவிற்கு 160 ரூபாய்க்கும் விற்கப்படுகின்றன. 

மேலும் படிக்க | நிர்மலா சீதாராமனுக்கு பதிலடி கொடுத்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News