புது டெல்லி: தங்கம் வாங்குபவர்களுக்கு இன்று ஒரு நல்ல செய்தி. உண்மையில், தங்கத்தின் விலை இன்று (வெள்ளிக்கிழமை) குறைந்துள்ளது. அதனால் தங்கம் வாங்குவது சற்று மலிவானதாகி விட்டது. உலகில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸின் தாக்கமும் தங்கத்தின் விலையில் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. வெள்ளிக்கிழமை உள்நாட்டு பங்குசந்தை வீழ்ச்சி, இன்றைய தங்கத்தின் விலை (Gold Price Today) வீழ்ச்சிக்கு வழிவகுத்தது. அதனால் டெல்லி சந்தையில் 10 கிராம் தங்கத்தின் விலையில் ரூ.222 குறைந்துள்ளது.
வெள்ளியும் மலிவானது:
இது தவிர, வெள்ளியின் விலையும் இன்று குறைந்துள்ளது. ஒரு கிலோ வெள்ளியின் விலை இன்று (வெள்ளிக்கிழமை) ரூ.60 குறைந்துள்ளது. அதாவது, இன்று நீங்கள் தங்கம் மற்றும் வெள்ளி வாங்க விரும்பினால், நேற்றையதை விட குறைவான பணத்தை செலவிட வேண்டியிருக்கும். யாராவது தங்கம் வாங்க திட்டமிட்டால், இன்று மலிவாக வாங்கலாம்.
சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை:
புதன்கிழமை தங்கத்தின் விலை பத்து கிராமுக்கு ரூ .43,502. செவ்வாய்க்கிழமை தங்கத்தின் விலை பத்து கிராமுக்கு ரூ .43,564 ஆக இருந்தது. அதே நேரத்தில், சர்வதேச சந்தையில் தங்கம் அவுன்ஸ் 1,632 டாலருக்கும், வெள்ளி அவுன்ஸ் 17.25 டாலருக்கும் வர்த்தகம் செய்யப்பட்டது.