TNPSC Group 4: கவுன்சிலிங் தேர்வுகள் அறிவிப்பு - விவரங்களை பார்ப்பது எப்படி?

TNPSC Group 4 Counselling: குரூப் 4 தேர்வில் தேர்வானவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலாந்தாய்வுக்கான தேதிகளை அரசு பணியாளர் தேர்வாணயம் அறிவித்துள்ளது.

Written by - Sudharsan G | Last Updated : Jul 12, 2023, 08:14 AM IST
  • 10 ஆயிரத்து 217 பணியிடங்களுக்காக இந்த தேர்வு நடைபெற்றது.
  • மொத்தம் 18 லட்சம் பேர் எழுதினர்.
  • இத்தேர்வின் முடிவுகள் கடந்த மார்ச் 24ஆம் தேதி வெளியானது.
TNPSC Group 4: கவுன்சிலிங் தேர்வுகள் அறிவிப்பு - விவரங்களை பார்ப்பது எப்படி? title=

TNPSC Group 4 Counselling: குரூப் 4 தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கான கலந்தாய்வு தேதிகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளன. பல நாட்களாக இதற்கான எதிர்பார்ப்பு தேர்வர்கள் மத்தியில் இருந்து வந்தது. 

இந்நிலையில், ஜூலை 20ஆம் தேதி முதல் கலந்தாய்வு நடைபெறும் என்பதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகி இருக்கிறது. குரூப் 4 தேர்வானது கடந்தாண்டு ஜூலை மாதம் 27ஆம் தேதி நடத்தப்பட்டது. இந்த தேர்வுக்கான முடிவுகள் இந்த ஆண்டு மார்ச் மாதம் 24ஆம் தேதி வெளியிடப்பட்டது. 

அதிகரிக்கப்பட்ட காலி பணியிடங்கள்

கிட்டத்தட்ட 18 லட்சம் பேர் இந்த தேர்வு எழுதினர். முதல் கட்டமாக ஏழாயிரத்துக்கும் மேற்பட்ட பணியிடங்கள் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அவை அதிகரிக்கப்பட்டு 10 ஆயிரத்து 217 பணியிடங்களுக்காக இந்த தேர்வு நடத்தப்பட்டது. 

குறிப்பாக இந்த குரூப் 4 தேர்வில் சுருக்கெழுத்தர், தட்டச்சர், கிராம நிர்வாக அலுவலர், தண்டலர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு சான்றுகள் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வுக்கான தேதியை அரசு பணியாளர் தேர்வாணயம் அறிவித்திருக்கிறது.

மேலும் படிக்க | திருநங்கைகளுக்கு சுயதொழில் செய்ய காவல்துறை ஏற்பாடு

இணையதளம் மற்றும் மின்னஞ்சல்

ஜூலை 20ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை இந்த கலந்தாய்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறுகிறது. யார் யார் எந்த தேதியில் கலந்தாய்வில் கலந்து கொள்ள வேண்டும் என்ற தகவல்கள் அவர்களது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்பட்டுள்ளதாக அரசு பணியாளர் தேர்வாணயம் தெரிவித்துள்ளது.

கலந்தாய்வுக்கு மொத்தம் 8 ஆயிரத்து 500 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இந்த 8,500 பேரின் பதிவெண் பட்டியலும் www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது. இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்வென்றால், இந்த கலந்தாய்வில் சான்றிதழ் சரிபார்ப்புடன் உடற்தகுதி தேர்வும் நடைபெறுகிறது.

உடற்தகுதி தேர்வு

இந்த உடற்தகுதித் தேர்வு நடைபெறும் முகவரியும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை TNSPC சாலையில் உள்ள எண். 3 TNPSC அலுவலகம் (சென்னை - 600 003) என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இப்போது, அதிகாரப்பூர்வ அறிவிப்பில் பட்டியலிடப்பட்டுள்ள நபர்கள் மட்டுமே உடற்தகுதித் தேர்வில் கலந்து முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தனிப்பட்ட தகவல் கிடையாது

இந்த தேர்வு நடைபெறும் தேதி மற்றும் நேரம் தொடர்பான தகவல்கள் அரசு பணியாளர் தேர்வாணயத்தின் இணையதளம், எஸ்எம்எஸ் மற்றும் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது. தேர்வர்களுக்கு தனிப்பட்ட தகவல் அனுப்பப்படாது என்றும் அரசு பணியாளர் தேர்வாணயம் அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளது. 

மேலும் படிக்க | மகளிர் உரிமைத் தொகை யாருக்கெல்லாம் கிடைக்கும்? யாருக்கெல்லாம் கிடைக்காது?
 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News