கடந்த சில நாட்களாகவே சர்ச்சை கருத்துக்களை வெளியிடுவதில் பெயர்போனவராக மாறியிருக்கிறார் அமைச்சர் ராஜகண்ணப்பன். தொடர்ந்து இவர் மீது எழுந்து வந்த புகாரால் தற்போது இவர் வகித்து வந்த இலாக்கா மாற்றப்பட்டு இருக்கிறது. போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த இவரை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராகவும், இதற்கு முன்னர் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர்க இருந்த அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கரை போக்குவரத்து துறை அமைச்சராகவும் மாற்றப்பட்டுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலராக பணிபுரிந்து வரும் ராஜேந்திர என்பவரை கடந்த 28ம் தேதி அமைச்சர் ராஜகண்ணப்பன் நேரில் வரவழைத்து அவரை ஜாதி பெயரை சொல்லி திட்டிய சம்பவம் பரப்பாகி உள்ளது.
மேலும் படிக்க | முதலமைச்சர் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு..பாஜக நிர்வாகி கைது
சாதி வெறியையும், அதிகார பலத்தையும் காட்டிய அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு எதிராக குரலைகள் ஒழிக்க தொடங்கியுள்ளது. இந்த சம்பவம் குறித்து அதிமுக அரசு, பட்டியலின அரசு அதிகாரியை சாதியின் பெயரால் இழிவாகபேசி,மிரட்டி,மனஉளைச்சலுக்கு ஆளாக்கிய அமைச்சர் திரு ராஜகண்ணப்பன் மீது முதல்வர் ஸ்டாலின் இன்னும் நடவடிக்கை எடுக்காதது ஏன்? என்று கேள்வி எழுப்பியிருந்தது. அதனை தொடர்ந்து மக்கள் நீதி மய்யமும் சமூகநீதி மக்களுக்குக்கான பாடம்தானா, மந்திரிக்கு இல்லையா? என்று கேள்வி எழுப்பியிருந்தது.
இதுபோன்று போக்குவரத்து துறை அமைச்சர் ராஜாக்கனப்பன் மீது தொடர்ந்து எழுந்த புகாரால் தமிழக அரசு இன்று அவரது இலாக்காவை மாற்றி இருக்கிறது. இந்த ஆட்சியில் இன்றுதான் தமிழக அரசு முதல்முறையாக அமைச்சரவையை மாற்றியுள்ளது. இவர் ஏற்கனவே அரசு பேருந்துகள் சைவ உணவகங்களில் மட்டுமே நிற்க வேண்டும் என சர்ச்சையான அறிக்கையை வெளியிட்டு சர்ச்சையை கிளப்பினார், அதன்பின்னர் எழுந்த எதிர்ப்பால் தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டார். மேலும் பதவி உயர்வு வாங்கி தருவதாக சிலரிடம் லஞ்சம் வாங்கியதாகவும் இவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR