TN Lockdown: தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு இன்று முதல் அமல்; என்னென்ன அனுமதி

தமிழ்நாட்டில் கொரோனா தொற்று பரவல் குறைவாக இருக்கும் 27 மாவட்டங்களில் இன்று முதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jun 14, 2021, 08:52 AM IST
  • தமிழ்நாட்டில் பல்வேறு கட்டங்களாக ஊரடங்கு
  • சலூன்கள், டாஸ்மாக் கடைகள், தேநீர்க் கடைகளுக்கு அனுமதி
  • தொழிற்சாலைகள் 33 சதவிகித பணியாளர்களுடன் செயல்படலாம்
TN Lockdown: தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு இன்று முதல் அமல்; என்னென்ன அனுமதி title=

TN Lockdown: தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுபடுத்த தமிழக அரசு கடந்த இரு வாரமாக முழு ஊடரங்கை அமல்படுத்தப்பட்ட நிலையில், தொற்று பாதிப்பு குறைந்து வருவதை தொடர்ந்து இன்று முதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

கொரோனா பரவலை (Corona Spread) ட்டுப்படுத்தும் விதமாக கடந்த மே மாதம் 10ஆம் தேதி முதல் தமிழ்நாட்டில் பல்வேறு கட்டங்களாக ஊரடங்கு (TN Lockdown) நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. அதன் விளைவாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உட்பட 27 மாவட்டங்களில் சலூன்கள், டாஸ்மாக் (Tasmac) கடைகள், தேநீர்க் கடைகளை இன்று முதல் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ALSO READ | Vacination for lactating women: பாலூட்டும் தாய்மார்களும் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம்

என்னென்ன தளர்வுகள்

1. டாஸ்மாக் மதுக்கடைகள் காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரை திறந்திருக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 
2. தேநீர்க் கடைகளில் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை பார்சல் சேவை மட்டும் அனுமதிக்கப்படும்.
3. இனிப்பு மற்றும் கார வகைகள் விற்பனை செய்யும் கடைகளை திறக்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
4. அரசு அலுவலகங்களில் இருந்து சான்றிதழ்கள் மற்றும் சேவைகளைப் பெற இ-சேவை மையங்கள் இன்று முதல் இயங்கும்
5. பூங்காக்கள், விளையாட்டுத் திடல்களில் காலை 6 மணி முதல் காலை 9 மணி வரை நடைப்பயிற்சிக்காக மட்டும் அனுமதிக்கப்படும். 
6. வேளாண் உபகரணங்கள் பழுது நீக்கும் கடைகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படலாம். 
7. மிக்சி, கிரைண்டர் உள்ளிட்ட வீட்டு உபயோக மின் பொருள்களை விற்பனை செய்யும் மற்றும் பழுதுநீக்கும் கடைகள், செல்பேசி மற்றும் அதுசார்ந்த பொருள்கள் விற்கும் கடைகள், கட்டுமானப் பொருள்களை விற்கும் கடைகள் ஆகியவை, காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை இயங்கலாம்.
8. மண்பாண்டம் - கைவினைப் பொருள்கள் தயாரிக்கும் கடைகளும் விற்கும் கடைகளும் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை அனுமதிக்கப்படும்.
9. பள்ளி, கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் மாணவர் சேர்க்கை குறித்த நிர்வாகப் பணிகளை மேற்கொள்ள அனுமதி
10. ஏற்றுமதி நிறுவனங்கள், அவற்றுக்கு இடுபொருள் தயாரித்து வழங்கும் நிறுவனங்கள் 50 சதவிகித பணியாளர்களுடன் தொடர்ந்து செயல்படலாம்.
11. தொழிற்சாலைகள் 33 சதவிகித பணியாளர்களுடன் செயல்படலாம். 
12. ஐடி நிறுவனங்களில் 20 சதவிகித பணியாளர்கள் மட்டும் பணிபுரிய அனுமதி.
13. வீட்டு வசதி நிறுவனம், வங்கி சாரா நிதி நிறுவனங்கள் மற்றும் அனைத்து காப்பீட்டு நிறுவனங்களும் 33 சதவிகித பணியாளர்களுடன் செயல்படலாம். 

ALSO READ | மாற்றுத் திறனாளிகள், திருநங்கைகளுக்கு நகர்புற அரசு பேருந்துகளில் இலவச பயணம்: தமிழக அரசு

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News