உள்ளாட்சி தேர்தல்: தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

Last Updated : Sep 30, 2016, 01:27 PM IST
உள்ளாட்சி தேர்தல்: தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு title=

தமிழக உள்ளாட்சி தேர்தலுக்கு தடை விதிக்க முடியாது உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தி.மு.க. சார்பில் சென்னை ஐகோர்ட்டில் தமிழக உள்ளாட்சி தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தை பயன்படுத்தவும், தேர்தல் பணிகளை மத்திய அரசு ஊழியர்கள் மேற்கொள்ள வேண்டும் என கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை கடந்த 21-ம் தேதி நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.

இந்த உத்தரவை எதிர்த்து தி.மு.க. சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்குர், நீதிபதி ஏ.எம்.கன்வில்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த மனுவை வருகிற 30-ம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப் படும் என உத்தரவிட்டனர். 

இன்று விசாரணைக்கு எடுத்துக்கொண்ட உச்ச நீதிமன்றம், தமிழக உள்ளாட்சி தேர்தலுக்கு தடைவிதிக்க மறுப்பு தெரிவித்துவிட்டது. 

மேலும், ஒரு வாரத்தில் தமிழக அரசு மற்றும் தமிழக தேர்தல் ஆணையம் பதிலளிக்க வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 

மேலும் வழக்கு விசாரணையை வரும் அக்டோபர் 6-ம் தேதிக்கு ஒத்திவைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. 

Trending News