இந்த ஆண்டில் நடைப்பெறும், தமிழக சட்டசபை முதல் கூட்டத்தொடர் நாளை தொடங்குகிறது!
ஆண்டுதோறும் சட்டசபை முதல் கூட்டத் தொடரில், ஆளுனர் பங்கேற்று உரையாற்றுவது வழக்கம், அந்த வகையில் நாளை நடைப்பெறும் முதல் கூட்டத்தொடரில் தமிழக ஆளுனர் பன்வாரிலால் புரோகித் பங்கேற்று உரையாற்றுகிறார்.
கூட்ட தொடரில் கலந்துகொள்வதற்காக அவர் நாளை காலை 9.55 மணியளவில் சட்டசபைக்கு வர இருக்கின்றார். அவரை, சபாநாயகர் ப.தனபால், சட்டசபை செயலாளர் பூபதி ஆகியோர் வரவேற்று சபைக்குள் அழைத்துச் செல்கின்றனர்.
சபாநாயகர் இருக்கையில் அமரும் கவர்னர் பன்வாரிலால் புரோகித், காலை 10 மணிக்கு ஆங்கிலத்தில் தன் உரையினை தொடங்குகிறார். பின்னர் அவரது உரையினை தமிழில் சபாநாயகர் ப.தனபால் வாசிப்பார்.
இந்த உரையில் அரசின் சாதனைகள், புதிய திட்டங்களை விவரித்து சுமார் ஒரு மணி நேரம் அவர் பேச இருக்கிறார் என தெரிகிறது.
பொங்கல் பண்டிகைக்கு முந்தைய நாள் (ஜன., 13) வரை இந்த கூட்டத்தொடர் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது!