நிறைவேற்றப்பட்ட 10 தீர்மானங்கள்... ஆளுநர் ஆர்.என். ரவி டெல்லி பயணம்? - முழு பின்னணி!

Governor RN Ravi Delhi Visit: தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் ஆளுநர் மீது தொடுத்த வழக்கு நாளை விசாரணைக்கு வர உள்ள நிலையில், அவர் இன்று டெல்லிக்கு செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

Written by - Sudharsan G | Last Updated : Nov 19, 2023, 12:31 PM IST
  • உச்ச நீதிமன்றம் ஆளுநரின் செயலாளருக்கு கடந்த முறை நோட்டீஸ் அனுப்பியது.
  • நேற்று சட்டப்பேரவையில் 10 தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.
  • தொடர்ந்து அந்த தீர்மானங்கள் ஆளுநர் மாளிகைக்கு அனுப்பப்பட்டன.
நிறைவேற்றப்பட்ட 10 தீர்மானங்கள்... ஆளுநர் ஆர்.என். ரவி டெல்லி பயணம்? - முழு பின்னணி! title=

Governor RN Ravi Delhi Visit: ஆளுநர் ஆர்.என்.ரவி - தமிழ்நாடு அரசுக்கு இடையிலான அமைதியற்ற போக்கு தற்போது மீண்டும் உச்சத்தை எட்டியுள்ளது எனலாம். தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பப்பட்ட பல்வேறு தீர்மானங்கள் மற்றும் அரசு தரப்பிலான கோப்புகளுக்கு ஒப்புதல் அளிக்காமல் நீண்ட காலமாக கிடப்பில் போடப்படுவதாக தமிழ்நாடு அரசு சார்பில் புகார்கள் எழுந்தன.

குடியரசு தலைவருக்கு கடிதம்

அதாவது, இந்தாண்டு தொடக்கத்தில் நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்திலும் ஆளுநரின் மோதல் போக்கு எதிரொலித்தது. ஆளுநரின் செயல்பாடுகளுக்கு எதிராக முதலமைச்சர் ஸ்டாலின் கடந்த ஏப்ரல் மாதம் தனித் தீர்மானம் கொண்டுவந்து, அது அவையிலும் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து, தமிழ்நாடு அரசின் கொள்கைகளுக்கு முரணாகவும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் பணிகளுக்கு முட்டுக்கட்டைப்போடுவதாகவும் கூறி ஆளுநர் ஆர்.என். ரவி குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் குடியரசு தலைவருக்கு கடிதம் எழுதினார்.

உச்ச நீதிமன்றத்தில் வழக்கு

இதற்கெல்லாம் உரிய நடவடிக்கைகள் இல்லையென கூறி, உச்ச நீதிமன்றத்தில் ஆளுநர் ஆர்.என். ரவி தமிழ்நாடு அரசு தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட்,"காலவரம்பின்றி அரசின் மசோதாக்களை கிடப்பில் போடுவது மிகவும் கவலைக்குரியது" என்றார். மேலும், ஆளுநரின் செயலாளருக்கும், உள்துறை அமைச்சகத்திற்கும் நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டார். 

மேலும் படிக்க | 'எனது உடல்நலனைவிட மக்கள் நலனே முக்கியம்' - சட்டப்பேரவையில் மு.க.ஸ்டாலின்

இதை தொடர்ந்து, கடந்த 16ஆம் தேதி துணைவேந்தர்களை நியமிப்பதற்கான அதிகாரத்தை மாநில அரசுக்கு வழங்க வகை செய்யும் சட்ட மசோதா உட்பட தமிழ்நாடு அரசின் 10க்கும் மேற்பட்ட மசோதாக்களை ஆளுநர் ஆர்.என். ரவி மீண்டும் தலைமைச் செயலகத்திற்கு திருப்பி அனுப்பினார். இதனால், ஆளுநர் அரசுக்கு திருப்பி அனுப்பிய மசோதாக்களை மீண்டும் சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்து தனித் தீர்மானமாக நிறைவேற்றினார். இதற்காக சிறப்பு சட்டப்பேரவை கூட்டமும் கூட்டப்பட்டது.

இன்று பயணம்?

மசோதா ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட நிலையில், சட்டப்பேரவை செயலகம் மூலம், சட்டத்துறைக்கு அனுப்பப்பட்டது. மேலும், சட்டத்துறை மூலம் ஆளுநர் மாளிகை நேற்று சென்றடைந்தது. இந்நிலையில், ஆளுநர் ஆர்.என். ரவி இன்று டெல்லி புறப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 

அதாவது, ஆளுநர் ஆர்.என். ரவி இன்று மாலை சென்னையில் இருந்து டெல்லி செல்ல திட்டமிட்டுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. டெல்லி செல்லும் ஆளுநர், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, சட்ட வல்லுநர்களை சந்திக்கலாம் எனவும் தகவல்கள் கூறுகின்றன. உச்சநீதிமன்றத்தில் ஆளுநர் தொடர்பாக தமிழ்நாடு அரசு தொடுத்துள்ள வழக்கின் விசாரணை நாளை (நவ. 20) மீண்டும் வர உள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | ஆளுநர் நடுநிலையாக செயல்படவில்லை - அன்புமணி ராமதாஸ்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News