ரிஷபத்திற்கு போவதற்கு முன்னால் 4 ராசிகளுக்கு நல்லது செய்யப் போகும் புதன்! அதிர்ஷ்டகார ராசிகள் எவை?

Mercury Pour Luck: புதனின் அதிபலம் சில ராசிகளுக்கு அற்புதமான யோகத்தைக் கொடுக்கும்... புதனின் இளமை துள்ளும் மகிழ்ச்சியான காலகட்டத்தில் யாருக்கு அதிர்ஷ்டம் அள்ளும்?

Written by - Malathi Tamilselvan | Last Updated : May 22, 2024, 06:32 AM IST
  • ரிஷபத்திற்கு மாறவிருக்கும் புதன்
  • மேஷத்தில் புதன் சஞ்சாரம்
  • அதிர்ஷ்டத்தை அள்ளித்தரும் புத பகவான்
ரிஷபத்திற்கு போவதற்கு முன்னால் 4 ராசிகளுக்கு நல்லது செய்யப் போகும் புதன்! அதிர்ஷ்டகார ராசிகள் எவை? title=

புத்திக் காரகரான புதன், மேஷ ராசியில் சஞ்சரித்துக் கொண்டிருக்கிறார். மே 10 மாலை 6:39 மணி முதல் புதன் மேஷத்தில் இருக்கிறார். இன்னும் 8 நாட்களில் அதாவது மே 31ம் நாளன்று ரிஷப ராசிக்கு மாறுவார் புதன் பகவான். மே 24 வரை, புதன் கிரகம் புத்துணர்ச்சியுடன் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பார். புதனின் இந்தத் தன்மையால் சில ராசியினருக்கு அற்புதமான பலன்கள் கிடைக்கும்.

ஜோதிட சாஸ்திரத்தின் படி, புத்திசாலித்தனம் மற்றும் தொழிலுக்கு அடிப்படை கிரகமான புதன், மே 21 மற்றும் 24 க்கு இடையில் அதிக பலத்துடன் காணப்படுவார். மே 31 அன்று, சுக்கிரனின் ராசியான ரிஷப ராசிக்கு மாறுவதற்கு முன்னதாக இந்த குறுகிய காலகட்டத்தில் சில ராசிக்காரர்களுக்கு புதன் பெரிதும் அருள்புரிவார். இந்த ராசிக்காரர்களுக்கு திடீர் பணவரவு, எதிர்பாராத மகிழ்ச்சி, எதிர்பாராத லாபம், பிரபலமாவது, வேலையில் முன்னேற்றம், லாபத்தில் துரித முன்னேற்றம் என பல நன்மைகள் கிடைக்கும்.

எந்தெந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டத்தை, உற்சாகமான புதன் மாற்றுவார் என்பதை தெரிந்து கொள்வோம்.

மேலும் படிக்க | நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டுமா? மரணபயம் போக்கும் வைகாசி விசாக வழிபாடு!

மே 24 வரை புதனின் அதிர்ஷ்டப் பார்வையில் ரிஷபம்: ரிஷபம் ராசிக்காரர்களுக்கு புதனின் உற்சாகமான காலகட்டம் பல நன்மைகளைத் தரும். வியாபாரம் செய்பவர்கள் அனுகூலமான பலன்களைப் பெறுவார்கள். வேலை செய்பவர்களுக்கும் இந்த நேரம் வெற்றி தரும். புதிய வேலை வாய்ப்புகள், பணியில் மனநிறைவு கிடைக்கும். பணி உயர்வு, சம்பள உயர்வு போனஸ் என எதிர்பாராத பண வரத்து அதிகரிக்கும் அதே வேளையில் செலவுகளும் குறையும். ஒட்டுமொத்தமாக, இந்த காலகட்டத்தில் புதனின் செல்வாக்கு ரிஷப ராசியினருக்கு அமோகமாக இருக்கும்.

மே 24 வரை புதனின் அதிர்ஷ்டப் பார்வையில் மிதுனம்: புதனின் உத்வேகமான காலகட்டத்தில், மிதுன ராசியினருக்கு அதிர்ஷ்டம் அபரிதமாக இருக்கும். செய்த முதலீடுகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். வியாபாரம் நன்றாக நடக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலையில் திருப்தி, மனநிறைவு கிடைக்கும். எதிர்பாராத விதத்தில் புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும். வீட்டில் மகிழ்ச்சி நிலவும்.

மேலும் படிக்க | செவ்வாய் தோஷத்தை போக்க வைகாசி விசாகத்தன்று விரதம் இருப்பது எப்படி?

மே 24 வரை புதனின் அதிர்ஷ்டப் பார்வையில் கன்னி: சாதகமான பலன்களைக் கொடுக்கும் புதனின் வலுவான காலகட்டத்தில் எதிர்பாராத வகையில் எங்கிருந்தோ திடீரென்று பணம் வரலாம். தொட்டதெல்லாம் துலங்கும். தொழிலில் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். திருமண வாழ்க்கையிலும் காதல் அதிகரிக்கும். காதலர்களுக்கு இது ரம்மியமான காலமாக இருக்கும். குடும்பத்தில், காதலுக்கு பச்சைக்கொடி காட்டப்படும். மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும்.

மே 24 வரை புதனின் அதிர்ஷ்டப் பார்வையில் கும்பம்: புதனின் அபரிதமான பலத்தினால், கும்ப ராசியினரின் அறிவுத்திறன் அதிகரிக்கும், அனைவராலும் பாராட்டப்படும் அளவிற்கு உங்களுடைய செயல்பாடுகள் இருக்கும். இந்த காலகட்டத்தில் எடுக்கும் முடிவுகள் எதிர்காலத்தில் பயனுள்ளதாக இருக்கும். செலவுகளை மட்டும் கட்டுப்படுத்தினால் போதும், நீங்கள் தான் ராஜா. புகழும் மரியாதையும் வந்து குவியும் நேரம் இது... தனிப்பட்ட வாழ்க்கைக்கும் நேரம் சாதகமாக இருக்கும்.

மேலும் படிக்க | ஜூன் 5 சனி ஜெயந்தி! சனீஸ்வரரின் அருட்கடாட்சம் கிடைக்க என்ன செய்ய வேண்டும் தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News