பிரதமர் மோடி பலவற்றிற்கு பாராட்டப்பட்டாலும் அவரது ஆடைக்காக பலமுறை எதிர்க்கட்சிகளால் கிண்டல் செய்யப்பட்டுள்ளார். பிரதமர் அணியும் உடைகள் பற்றி பல்வேறு கட்டுக்கதைகளும் உள்ளன. தனது அரசியல் வாழ்க்கையில் 250 ஜோடி துணிகள் வைத்திருந்தது தான் என் மீது சுமத்தப்பட்ட மிகப்பெரிய குற்றச்சாட்டு என்று மோடி சமீபத்தில் கூறியுள்ளார். இந்த குற்றச்சாட்டை காங்கிரஸ் தலைவரும் குஜராத் முன்னாள் முதல்வருமான அமர்சிங் சவுத்ரி வைத்துள்ளார். அதற்கு தான் பொதுக்கூட்டத்தில் பதிலளித்ததாக மோடி சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார். 250 கோடி திருடிய முதல்வர் வேண்டுமா அல்லது 250 ஜோடி உடைகள் வைத்திருக்கும் முதல்வர் வேண்டுமா என்று மக்களிடம் கேட்டேன் என்று மோடி கூறியுள்ளார்.
மேலும் படிக்க | பேனில் அதிகம் தூசி உள்ளதா? புதியது போல் ஜொலிக்க இந்த முறைகளை பின்பற்றுங்கள்!
குஜராத் முதல்வர் மோடி
மோடி குஜராத் முதல்வராக இருந்தபோது நடந்த சம்பவங்களை இந்த பேட்டியில் நினைவு கூர்ந்துள்ளார். ஒரு பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் முதல்வர் சவுத்ரியின் குற்றச்சாட்டுகளை ஏற்றுக்கொண்டதாகவும், ஆனால் அவர் தவறான புள்ளிவிவரங்களை கொடுத்துள்ளதாகவும் கூறினார். “அன்று நான் ஒரு பொதுக்கூட்டம் நடத்தினேன், அவர் வைத்த குற்றச்சாட்டை ஏற்றுக்கொள்கிறேன், ஆனால் அந்த எண்களில் தவறு உள்ளது" என்று கூறியதாக மோடி தற்போது தெரிவித்துள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பிரதமர் மோடியின் ஆடைகளை எதிர்க்கட்சிகள் விமர்சித்தது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மோடி விலையுயர்ந்த ஆடைகளை அணிவதாகக் விமர்சித்திருந்தார்.
மோடியின் பிராண்ட் பற்றி அவரது கேட்டபோது, “பிராண்ட் என்றால் என்ன, அது எப்படி வேலை செய்கிறது என்று எனக்குத் தெரியாது. எனது அரசியல் வாழ்க்கையையும் அன்றாட பணிகளையும் மக்கள் பார்க்கின்றனர். குஜராத்தில் 13 ஆண்டுகள் முதல்வராகவும், 10 ஆண்டுகள் இந்தியாவின் பிரதமராகவும் பதவி வகித்து வருகிறேன். எனது 100 வயது தாயார் தனது கடைசி நாட்களை அரசு மருத்துவமனையில் கழித்து வருகிறார். என் வாழ்க்கை வித்தியாசமானது என்பதை நாடு புரிந்து கொள்ள முடியும்" என்று மோடி தெரிவித்துள்ளார்.
மோடியின் சொத்து மதிப்பு
பிரதமர் நரேந்திர மோடி தனக்கு ரூ. 3 கோடி சொத்து உள்ளது என்று தேர்தல் பிராமண பத்திரத்தில் தாக்கல் செய்துள்ளார். ஆனால் அவரது பெயரில் எந்த ஒரு நிலம், ஆடம்பர வீடு, சொகுசு கார்கள் என எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளார். ரூ. 3 கோடியில் பெரும்பகுதி பாரத ஸ்டேட் வங்கியில் உள்ளது. அதாவது ரூ. 2.86 கோடி நிலையான வைப்புத்தொகையில் உள்ளது. அவரது கையில் மொத்தம் ரூ. 52,920 ரொக்கமும், காந்திநகர் மற்றும் வாரணாசியில் உள்ள வங்கிக் கணக்குகளில் ரூ. 80,304 உள்ளது. இது தவிர தேசிய சேமிப்புச் சான்றிதழில் ரூ. 9.12 லட்சம் முதலீடு மற்றும் ரூ. 2.68 லட்சம் மதிப்புள்ள நான்கு தங்க மோதிரங்கள் மோடியிடம் உள்ளது.
மேலும் படிக்க | தாய்லாந்திற்கு சுற்றுலா செல்ல திட்டமா? விசா தொடர்பான விதிகளில் மாற்றங்கள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ