6வது மாடியில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்த வட மாநில வாலிபர்! காரணம் என்ன?

 7 அடுக்கு மாடி கட்டிடத்தில் போதுமான பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாததால்  6 வது மாடியில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்த வட மாநில வாலிபர்.   

Written by - JAFFER MOHAIDEEN | Edited by - Yuvashree | Last Updated : May 20, 2024, 08:40 PM IST
  • 6வது மாடியில் இருந்து தவறி விழுந்த வடமாநில வாலிபர்
  • காரணம் என்ன?
  • மருத்துவமனையில் நடந்த சம்பவம்!
6வது மாடியில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்த வட மாநில வாலிபர்! காரணம் என்ன? title=

திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் 56 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் 7 அடுக்கு மாடி கட்டிடத்தில் போதுமான பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாததால்  6 வது மாடியில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்த வட மாநில வாலிபர். 

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் 56 கோடி மதிப்பீட்டில் அரசு மருத்துவமனை கூடுதல் கட்டிடமாக ஏழு அடுக்கு கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. இதனை GMS கன்ஸ்ட்ரக்ஷன்  நிறுவனம் சார்பில் இந்த கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது.

இதில் நூற்றுக்கும் மேற்பட்ட  வடமாநில இளைஞர்கள் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் வெஸ்ட் பெங்கால் பகுதியை சார்ந்த முகமது இஸ்மாயில் மகன் அபுதாகிர் (19) என்கிற வாலிபர் எந்தவிதமான பாதுகாப்பு உபகரணங்களும் பயன்படுத்தாமல் ஆறாவது அடுக்கு மாடியில் கட்டிடத்திற்கு பூசு வேலை செய்தாக கூறப்படுகிறது.

மேலும் படிக்க | ஊட்டிக்கு சுற்றுலா செல்ல திட்டமா... உங்களுக்காகவே அடித்திருக்கிறது ஒரு ஜாக்பாட்

இந்த நிலையில் திடீரென நிலை தடுமாறிய வாலிபர்  மேலே இருந்து கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு  சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதனை அறிந்த மருத்துவ மற்றும் ஊரக நல பணிகள் இணை இயக்குனர் கண்ணகி சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து  வடமாநில இளைஞர் உயிரிழந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டார். மேலும் கட்டிடப் பணியில் ஈடுபட்டு வரும் வட மாநில வாலிபர்களுக்கு உண்டான பாதுகாப்பு உபகரணங்களையும் கொடுக்க வேண்டும் எனக் கூறியும் சென்றார்.

இந்த சம்பவம் குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில் அரசு மருத்துவமனை கூடுதல் கட்டிடத்தில் வடமாநில இளைஞர்கள் எந்த ஒரு பாதுகாப்பு உபகரணமும் இல்லாமல் வேலை செய்து வருகின்ற விஷயம் அனைவருக்கும் தெரிந்ததாக இருந்தாலும் துறை சார்ந்த அதிகாரிகள் ஒப்பந்ததாரரின் மெத்தனப் போக்கை கண்டு கொள்ளாமல் விட்டதின் காரணமாக தற்பொழுது ஒரு உயிரிழப்பு ஏற்பட்டிருக்கிறது இனிவரும் காலங்களில் இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க முறையாக நடவடிக்கையை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என்று கருத்து தெரிவித்தனர்.

மேலும் படிக்க | சுங்கச்சாவடியில் நடந்த மோதல்... காயமடைந்த ஊழியர்கள்... போலீசார் விசாரணை..!!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News