தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு கொரோனா தொற்று உறுதி!

தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு, அறிகுறியற்ற கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது..!

Last Updated : Aug 2, 2020, 06:18 PM IST
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு கொரோனா தொற்று உறுதி! title=

தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு, அறிகுறியற்ற கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது..!

ஆளுநர் மாளிகை ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்று காலை சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு ஆளுநர் பரிசோதனைக்கு சென்றார். பரிசோதனைக்கு பின், ஆளுநர் மாளிகைக்கு திரும்பிய நிலையில் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. மேலும், ஆளுநருக்ககு அறிகுறிகள் இன்றி தொற்று இருக்கும் நிலையில், வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ள மருத்துவர்கள் அறிவுறுத்தியதாக தெரிகிறது.

சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார், தீயணைப்புப் படை வீரர்கள், CRPF ஊழியர்கள் உள்ளிட்ட 84 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதன்பின்னர், ராஜ்பவன் ஊழியர்கள் மேலும் 38 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், 3 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்கள் அனைவரும் ஆளுநருக்கு நெருக்கமாக பணிபுரிந்த ஊழியர்கள். பன்வாரிலால் புரோஹித் அதில், ஒருவர் ஆளுநர் பன்வாரிலாலின் உதவியாளர்.

அதில், ஒருவர் ஆளுநர் பன்வாரிலாலின் உதவியாளர். இதையடுத்து, கடந்த 29 ஆம் தேதி 7 நாட்களுக்கு ஆளுநர், தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார். தனிமைப்படுத்திக் கொண்டு 3 நாள்கள் ஆன நிலையில், அவருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில், ஆளுநருக்கு பரிசோதனையில் கொரோனா உறுதி என காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. காவேரி மருத்துவமனை அறிக்கையில் வெளியிட்டுள்ளதாவது.... "ராஜ்பவனில் தன்னை தானே தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தல். அறிகுறியற்ற கொரோனா உறுதியான நிலையில், அவரது உடல்நிலை சீராக உள்ளது. 

Trending News