மொழிப்போர் தியாகிகள் நினைவு தினத்தை முன்னிட்டு மதுரை தமுக்கம் மைதானம் அருகேயுள்ள தமிழன்னை சிலைக்கும், தியாகிகளின் படங்களுக்கும் மலர் தூவி முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு வீர வணக்கம் செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசுகையில், "தஞ்சாவூரில் எம்.ஜி.ஆர் சிலை உடைத்தது கண்டனத்துக்குரியது. குற்றவாளிகள் மீது பாரபட்சமின்றி அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், இல்லையெனில் பெரும் ஆர்பாட்டம் நடத்தப்படும். திமுக ஆட்சியில் மக்களுக்கும், போலீசாருக்கு மட்டுமல்ல, சிலைக்கு கூட பாதுகாப்பு இல்லை என்பது தெரிகிறது.
ALSO READ | தமிழக அலங்கார ஊர்திகள் நிராகரிக்கப்பட்டது ஏன்? முதல்வருக்கு பாதுகாப்பு அமைச்சர் கடிதம்
திமுக அரசு (DMK Government) தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் வாக்களித்த மக்களுக்கு மட்டுமின்றி, அரசு அதிகாரிகளுக்கும் அல்வா கொடுத்துள்ளது. அதற்கான விளைவுகளை நகர்புற உள்ளாட்சி தேர்தலில் மக்கள் அளிப்பார்கள். பொங்கல் பரிசுத்தொகுப்பில் தரமற்ற பொருட்களை வழங்கிய விவகாரத்தில் சம்பந்தபட்ட நிறுவனங்களை கருப்பு பட்டியலில் வைப்பதாக அரசு கூறுகிறது.
இதனால் மக்களுக்கு என்ன பயன்? சம்பந்தப்பட்ட நிர்வாகிகள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குடியரசு தின ஊர்வலத்தில் தமிழக ஊர்தி மறுக்கப்பட்ட விவகாரத்தில், தமிழக அரசின் அனுபவம் இல்லாத அதிகாரிகளின் நடைமுறையே காரணம்" என தெரிவித்தார். முன்னதாக மத்திய அரசால் அனுமதி மறுக்கப்பட்ட குடியரசு தின ஊர்தி தமிழகத்தில் இடம்பெறும் என்று தமிழக முதல்வர் முக. ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.
ALSO READ | தமிழக ஊர்தி நிராகரிக்கப்பட்டது குறித்து பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR