தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை மற்றும் வேளாண் அறிக்கை விரைவில் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், இது தொடர்பாக கடந்த 5ம் தேதி தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. கேபினட் அமைச்சரவை கூட்டத்தில் வரி மற்றும் விற்பனை வரியை உயர்த்த ஒப்புதல் வழங்கப்பட்டது.
இதையடுத்து இன்று முதல் டாஸ்மாக் மதுபானங்களுக்கு குவாட்டர் ஒன்றுக்கு சாதாரண ரகங்களுக்கு 10 ரூபாயும், மீடியம் மற்றும் உயர் ரக மதுபானங்களுக்கு 20 ரூபாயும் விலை உயருகிறது. பீர் வகைகளுக்கு 10 ரூபாய் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் அரசுக்கு ஒரு நாளைக்கு மதுவகைகள் மூலம்10 கோடி ரூபாய்க்கும் மேல் கூடுதல் வருவாய் வர வாய்ப்புள்ளது. இன்று காலை 12 மணியளவில் கடை திறந்தவுடன் புதிய விலை பட்டியல் படி மதுபானங்கள் விற்பனை செய்யப்பட வேண்டும் என்று டாஸ்மாக் விற்பனையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
180 மில்லி அளவு கொண்ட குவார்ட்டர் ரம், விஸ்கி, பிராந்தி, வோட்கா போன்ற மது வகைகளின் விலை 12 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது பீர் விலையில் மாற்றம் எதுவும் அறிவிக்கப்படவில்லை. மதுபானங்களின் விலை இன்று 07.03.2022 காலை முதல் மாற்றி அமைக்கப்படுகிறது.
மேலும் படிக்க | விரிசல் விடுகிறதா திமுக கூட்டணி? என்ன செய்ய போகிறார் ஸ்டாலின்!!
புதிய விலைப்பட்டியலை இன்று காலை 8 மணி அளவில் மேற்பார்வையாளர்கள் அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளவும். நேற்றைய 06-03-2022 தேதியின் இருப்பு பட்டியலை பிராண்ட் வாரியாக பேக் வாரியாக அலுவலகத்தில் இன்று மதியத்திற்குள் ஒப்படைக்கவேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.
இன்று காலை 12 மணியளவில் கடை திறந்தவுடன் புதிய விலை பட்டியல் படி விற்பனை செய்ய அறிவுறுத்தப்படுகிறது.
மேலும் படிக்க | திமுக தலைவர் ஸ்டாலின் காட்டிய அதிரடி - அடங்கி போன சேலம் நிர்வாகிகளின் ஆட்டம்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR