தேசிய சேவைத் திட்ட இயக்கம் மாணவர்களுக்கு தமிழக் ஆளுநர் வாழ்த்து!

தேசிய சேவை திட்ட (NSS) மாணவர்கள், தமிழக ஆளுநர் பன்வாரிலால் அவர்களை இன்று சந்தித்தனர். 

Last Updated : Feb 2, 2018, 10:11 PM IST
தேசிய சேவைத் திட்ட இயக்கம் மாணவர்களுக்கு தமிழக் ஆளுநர் வாழ்த்து! title=

புதுடெல்லியில் ஜன.,26 அன்று நடைப்பெற்ற குடியரசுதின விழா அணி வகுப்பில் கலந்துக்கொண்டு சென்னை திரும்பியுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த 20 தேசிய சேவை திட்ட (NSS) மாணவர்கள், தமிழக ஆளுநர் பன்வாரிலால் அவர்களை இன்று சந்தித்தனர். 

ஆளுநரின் கூடுதல் தலைமைச் செயலாளர் திரு. ஆர். ராஜகோபால், இ.ஆ.ப. அவர்களும் இந்நிகழ்வில் அவர்களுடன் இருந்தார்.

மாணவர்களின் சேவை மனப்பான்மையை பாராட்டிய மாண்புமிகு ஆளுநர் அவர்கள் தற்போது 32 இலட்சம் மாணவர்களுடன் செயல்படும் தேசிய சேவைத் திட்ட இயக்கம் இயதியாவிலேயே அதிக மாணவர்களைக்கொண்டு பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் தமிழ்நாட்டில் செயல்படுகிறது என்றும் தெரிவித்தார்.

48 ஆண்டுகளுக்கு முன்பு 40000 தொண்டர்களுடன் தொடங்கப்பட்ட தேசிய சேவைத்திட்டம் கடந்த ஆண்டுகளில் 4 கோடி மாணவர்களுடன் சேவையில் ஈடுபட்டிருக்கிறது. தேசிய சேவைத் திட்ட மாணவர்கள் பணியில், பேரிடர் மேலாண்மை, இரத்ததான முகாம், மருத்துவ முகாம்கள் ஆகியவற்றில் கலந்துகொண்டு தேசிய ஒருமைப்பாட்டை மேம்படுத்த உதவியுள்ளார்கள் என்றும் தெரிவித்தார்.

மாணவர்கள் டாக்டர் அப்துல் கலாம் அவர்களை முன்னுதாரணமாகக்கொண்டு கல்வியிலும், மக்கள் சேவையிலும் தங்களை அர்ப்பணித்துக்கொண்டு மேலும் மேலும் வளர வேண்டும் என்ற தனது வாழ்த்தினையும் தெரிவித்தார்.

Trending News