சேலத்தில் ஏலச்சீட்டு மோசடி; 15 கோடி ரூபாய் அபேஸ் செய்த வட மாநில இளைஞர்!

சேலத்தில் மாத ஏலச் சீட்டில் பணம் போட்டு ஏமாற்றமடைந்த 50க்கும் மேற்பட்டவர்கள்  இன்று மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்தனர்.  

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Jan 24, 2022, 05:37 PM IST
சேலத்தில் ஏலச்சீட்டு மோசடி; 15 கோடி ரூபாய்  அபேஸ் செய்த வட மாநில இளைஞர்! title=

சேலத்தில் மாத ஏலச் சீட்டில் பணம் போட்டு ஏமாற்றமடைந்த 50க்கும் மேற்பட்டவர்கள்  இன்று மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்தனர்.  பின்னர்  செய்தியாளர்களிடம் இது குறித்து கூறினர்.

சேலத்தில்  புதிய பேருந்து நிலையம் செவ்வாய்பேட்டை குகை பழைய பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் பேன்சி ஸ்டோர் மளிகை கடை பிளாஸ்டிக் பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு விதமான பொருட்களை மொத்த விற்பனை செய்து வருகின்றனர்.

இந்நிலையில், செவ்வாய்பேட்டை பகுதியில்  மளிகை கடை நடத்தி வரும் வட மாநிலத்தைச் சேர்ந்த பிரகாஷ் என்பவர் மளிகைக் கடை மட்டுமில்லாமல் 10 லட்சம் 20 லட்சம் 30 லட்சம் என  பல்வேறு தொகையில் மாதத் தவணை ஏலச்சீட்டு நடத்தி வந்துள்ளார். 

மாத ஏல சீட்டில் 150 க்கும் மேற்பட்டோர் பிரகாஷ் என்பவரிடம் பல்வேறு தொகையில் ஏலச் சீட்டில்  மாதம்தோறும் பணம் செலுத்தி வந்த நிலையில் ஏலம் நடத்தும் சமயத்தில் பணம் போட்ட நபர்களிடம் தெரிவிக்காமலேயே ஏலத்தை முடித்து சம்பந்தப்பட்ட நபர் மீது ஏலம் விடப்பட்டது எனக் கூறி பணத்தை அவரே எடுத்துக் சென்று விட்டார். 

இதனால் பல மாதங்களாக ஏலம் நடத்தாமல் இருந்ததால் ஏலச்சீட்டு நடத்தி வந்த பிரகாஷிடம்  கேட்டபோது ஏலம் முடிந்து விட்டது என்றும் தங்களுக்கு அடுத்த மாதம் பணம் தருகிறேன் என்றும் பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து ஏமாற்றி வந்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த நாங்கள் பணத்தை திருப்பி  கேட்டபோது பணம் தர முடியாது என்று கூறி கொலை மிரட்டல் விடுப்பதாக தெரிவித்தார்

ALSO READ | திண்டுக்கல்லில் குப்பைத்தொட்டியில் வீசப்பட்ட பச்சிளம் பெண் சிசு..!!

என்ன செய்வதென்றே தெரியாமல் தொழில் செய்ய பணம் இல்லாமல் அவதியுற்று வருவதாக பாதிக்கப்பட்டவர்கள் கூறினர். இந்த ஏலச் சீட்டில் தங்களைப் போன்றோரிடம் பணம் வாங்கியதில் சுமார் 15 கோடி ரூபாய் ஏமாற்றி மோசடி செய்து உள்ளார் என அவர்கள் தெரிவித்தனர். எனவே மோசடி செய்த நபர் மீது உரிய நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட நபர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

ALSO READ | திருப்பூர் அருகே தீ விபத்தில் ரூ.50 லட்சம் மதிப்பிலான துணிகள் எரிந்து நாசம்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News