முதலமைச்சரை ஒருமையில் பதிவிட்ட சப்-இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம்

தமிழ் மொழி மற்றும் தமிழக அரசு குறித்து சமூகவலைதளத்தில் அவதூறாக பதிவிட்ட சப்இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

Written by - S.Karthikeyan | Last Updated : Mar 2, 2023, 02:00 PM IST
முதலமைச்சரை ஒருமையில் பதிவிட்ட சப்-இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம் title=

சென்னை பூக்கடை காவல்நிலையத்தில் சப் இன்ஸ்பெக்டராக இருந்தவர் சேகர். சமூகவலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் அவர், அண்மையில் பதிவிட்ட கருத்து ஒன்று சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அரசுப் பணியாளராக இருக்கும் அவர், அரசின் நலத்திட்டங்களையும், தமிழ் மொழியையையும் கடுமையாக விமர்ச்சித்து நண்பர் ஒருவருக்கு பதில் எழுதியிருந்தார்.

ALSO READ | ரத்தக்காயங்களுடன் தண்ணீரில் மிதந்த ஆண்சடலம் - காவல்துறை விசாரணை

அதில், " தமிழ் என்ற காட்டுமிராண்டி மொழியில ஒருத்தன் 5000 ஆயிரம் கொடுக்க சொன்னான். வந்தா அதைக் காணோம். அதைக் கேளுங்கடா என்றால், புரியாத ஹிந்திமொழியில பேசியதை.. ஏதோ புரிஞ்ச மாதிரி... சொல்லாத லட்சத்தை கேட்கிறான் பாருங்க கொத்தடிமை..!" என பதிவிட்டிருந்தார்.

அவரது இந்தப் பதிவு போலீஸ் வட்டாரத்திலும், சமூகவலைதளத்திலும் வைரலாக பரவிய நிலையில், சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜி வால் இதுகுறித்து விசாரணை நடத்துமாறு உத்தவிட்டார். இந்த விசாரணையில் சீருடை பணியாளர் விதியை மீறியதாக குற்றம்சாட்டப்பட்டு பணியிடை நீக்கமும் செய்யப்பட்டுள்ளார். காவல்துறையில் சப்இன்ஸ்பெக்டராக இருக்கும் ஒருவரே தமிழக முதலமைச்சரை சமூகவலைதளத்தில் மறைமுகமாக சாடியிருப்பது காவல்துறை வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

ALSO READ | ஆளுநர் தமிழிசையை மாடு முட்டவந்ததால் பரபரப்பு - வேகமாக பரவும் வீடியோ

அதிமுக ஆட்சியில் இருந்தபோது அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு 2000 ரூபாய் பொங்கல் பரிசாக கொடுத்தது. ஆனால், எதிர்க்கட்சி தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின் 5 ஆயிரம் ரூபாய் கொடுக்க வேண்டும் என வலியுறுத்தினார். இப்போது ஆட்சியில் இருக்கும் திமுக, அதிமுக கொடுத்த பொங்கல் பரிசைக் கூட கொடுக்கவில்லை என பலரும் விமர்சித்த வந்ததை குறிப்பிட்டு, சப்இன்ஸ்பெக்டர் சேகர் மறைமுகமாக தனது பதிவில் சாடியிருந்தார். 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News