தங்கம் வென்ற தமிழக வீராங்கனை இளவேனிலுக்கு தமிழக முதல்வர் வாழ்த்து!

உலகக்கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் தங்கம் வென்ற தமிழக வீராங்கனை இளவேனில் வளரிவானுக்கு தமிழக முதல்வர் வாழ்த்து தெரிவித்துள்ளார்!

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 30, 2019, 10:23 AM IST
தங்கம் வென்ற தமிழக வீராங்கனை இளவேனிலுக்கு தமிழக முதல்வர் வாழ்த்து! title=

உலகக்கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் தங்கம் வென்ற தமிழக வீராங்கனை இளவேனில் வளரிவானுக்கு தமிழக முதல்வர் வாழ்த்து தெரிவித்துள்ளார்!

உலகச் சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீராங்கனை PV சிந்து தங்கம் வென்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்த நிலையில், தற்போது மேலும் ஒரு இந்திய வீராங்கனை குறிப்பாக தமிழக வீராங்கனை தங்கம் பெற்று நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார்.

பிரேசில் நாட்டில் இன்று நடைபெற்ற துப்பாக்கி சுடுதல் இறுதிப் போட்டியில் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் 251.7 புள்ளிகள் எடுத்து தமிழக வீராங்கனை இளவேனில் வளரிவான் தங்கம் வென்றுள்ளார். தங்கம் வென்றுள்ள இளவேனில் வளரிவானுக்கு தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அதுக்குறித்து தந்து ட்விட்டர் பக்கத்தில், "பிரேசில் நாட்டில் நடைபெற்ற துப்பாக்கி சுடுதல் உலகக்கோப்பை போட்டியில், தங்கம் வென்று சாதனை படைத்த தமிழகத்தை சேர்ந்த வீராங்கனை இளவேனில் வளரிவான் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்." எனக் கூறியுள்ளார்.

Trending News