பிளஸ் 2 தேர்வு முடிவு: 1813 பள்ளிகள் 100% தேர்ச்சி

Last Updated : May 12, 2017, 01:21 PM IST
பிளஸ் 2 தேர்வு முடிவு: 1813 பள்ளிகள் 100% தேர்ச்சி title=

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் ஆன்லைனில் வெளியானது. இதில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 92.1 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். 1813 பள்ளிகள் 100 சதவீதம் தேர்வு அடைந்துள்ளன. மேலும் கடந்த ஆண்டைவிட மொத்த தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டை விட 0.7 சதவீதம் மாணவர்கள் கூடுதலாக தேர்ச்சி பெற்றுள்ளனர்

தமிழகத்தில் இந்த ஆண்டு ஒட்டுமொத்த தேர்ச்சி விகிதம் 92.1%. மாணவர்கள் தேர்ச்சி விகிதம் 82.3%. மாணவிகள் தேர்ச்சி விகிதம் 94.5%. 

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின. முடிவு வெளியான, 10 நிமிடங்களில், மாணவர்களின் மொபைல் போனுக்கு, மதிப்பெண் விபரம், எஸ்.எம்.எஸ்.,சில் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மொத்தம் 9 லட்சம் மாணவ, மாணவிகள் பிளஸ்-2 தேர்வுகளை எழுதியிருந்தனர். தேர்வு முடிவுகளை பெரும்பாலான மாணவ, மாணவியர் இணையதளம் வழியாக பார்ப்பார்கள் என்பதால், அவர்களின் வசதிக்காக மூன்று இணையதளங்களில் தேர்வு முடிவுகளை வெளியிட பள்ளிக் கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது. 

தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் இணையதளங்கள்:-

www.tnresults.nic.in

www.dge1.tn.nic.in

www.dge2.tn.nic.in

www.tnresults.gov.in ஆகிய இணையதளங்களில் மாணவ, மாணவிகள் தங்கள் பிளஸ்-2 முடிவுகளை பார்க்கலாம்.

தமிழகம், புதுச்சேரியில் உள்ள 6,737 பள்ளிகளை சேர்ந்த 8 லட்சத்து 98 ஆயிரத்து 763 மாணவ, மாணவியர் தேர்வு எழுதினர். மாணவர்களை விட இந்த ஆண்டு மாணவியர் 62 ஆயிரத்து 843 பேர் கூடுதலாக தேர்வு எழுதியுள்ளனர். அறிவியல் பாடத் தொகுதியின் கீழ் 5 லட்சத்து 97 ஆயிரத்து 738 பேரும், வணிகவியல் பாடத் தொகுதியின் கீழ் 2 லட்சத்து 23 ஆயிரத்து 977 பேரும், கலைப் பாடத் தொகுதியின் கீழ் 13 ஆயிரத்து 354 பேரும், தொழில் பாடப் பிரிவின் கீழ் 63 ஆயிரத்து 694 பேரும் எழுதியுள்ளனர். தனித் தேர்வர்களாக 34 ஆயிரத்து 868 பேரும் எழுதினர்.

பிளஸ் 2 முடிவுகள் இனி ரேங்க் முறையில் வெளியிடப்படாது என அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். மேலும் அவர், முதல் 3 இடங்களை பிடிக்கும் மாணவர்கள் பெயர் வெளியிடப்பட மாட்டாது. விடைத்தாள் நகல் பெறவும் மறுகூட்டல் செய்யவும் மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகள் மூலமாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மையங்கள் மூலமாகவும் இன்று முதல் 15-ம் தேதி வரை (ஞாயிற்றுக்கிழமை தவிர) விண்ணப்பிக்கலாம் என்று அரசு தேர்வுகள் இயக்குநர் ஏற்கெனவே அறிவித்துள்ளார்.

Trending News