+2 தேர்வு முடிவு: எந்த இணையதளங்களில் பார்க்கலாம்?

Last Updated : May 12, 2017, 01:22 PM IST
+2 தேர்வு முடிவு: எந்த இணையதளங்களில் பார்க்கலாம்? title=

பிளஸ்-2 தேர்வு முடிவு இன்று (மே 12-ம் தேதி) காலை 10 மணிக்கு வெளியிடப்படும். முதல் முறையாக பிளஸ் 2 தேர்வு முடிவு முறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மொத்தம் 9 லட்சம் மாணவ, மாணவிகள் பிளஸ்-2 தேர்வுகளை எழுதியிருந்தனர். தேர்வு முடிவுகளை பெரும்பாலான மாணவ, மாணவியர் இணையதளம் வழியாக பார்ப்பார்கள் என்பதால், அவர்களின் வசதிக்காக மூன்று இணையதளங்களில் தேர்வு முடிவுகளை வெளியிட பள்ளிக் கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது. 

தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் இணையதளங்கள்:-

www.tnresults.nic.in

www.dge1.tn.nic.in

www.dge2.tn.nic.in

www.tnresults.gov.in ஆகிய இணையதளங்களில் மாணவ, மாணவிகள் தங்கள் பிளஸ்-2 முடிவுகளை பார்க்கலாம்.

மேலும் தேர்வு முடிவுகள் வெளியான பத்து நிமிடங்களுக்குள் மாணவர்களின் செல்போன் எண்களுக்கும் தேர்வு முடிவுகள் எஸ்.எம்.எஸ் வாயிலாக அனுப்பப்படும்.

Trending News