சென்னையில் உணவகங்களில் இனி பார்சலுக்கு மட்டுமே அனுமதி

சென்னையில் உணவகங்களில் பார்சலுக்கு மட்டுமே அனுமதி என்ற உத்தரவு விரைவில் பிறப்பிக்கப்படும் என மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Apr 18, 2021, 02:34 PM IST
சென்னையில் உணவகங்களில் இனி பார்சலுக்கு மட்டுமே அனுமதி title=

இந்தியாவில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. நாள்தோறும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதுவரை இல்லாத அளவில் தேசிய அளவில் ஒரே நாளில் 2,00,000த்துக்கும் அதிகமானவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. எனவே இந்தியாவில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 1,50,00,000க்கும் அதிகமாகிவிட்டது.

மறுபுறம் தமிழகத்தில் கொரோனா (Coronavirus) பாதிப்பு அதிகரித்துள்ளது. இதனால் கடந்த ஆண்டை போல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என பரவலாக பேசப்படுகிறது. மேலும்  தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகமாக உள்ள நிலையில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் கூறப்பட்டு வருகிறது. 

ALSO READ | Breaking: சுமார் 2000 ரூபாய் விலை குறைந்தது Remdesivir தடுப்பூசி, அரசின் அதிரடி முடிவு

இந்த நிலையில் இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கூறியதாவது., நடிகர் விவேக் (Vivekh) இறப்பிற்கும் கொரோனா தடுப்பூசிக்கும் (Corona Vaccine) எந்த சம்பந்தமும் இல்லை. கொரோனா தடுப்பூசி குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்த வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் அவர் ஊசி போட்டுக் கொண்டார். எனவே வதந்தி பரப்பாமல் கொரோனா தடுப்பூசியை அனைவரும் போட்டுக் கொள்ளுங்கள்.

மேலும் பேசிய அவர் சென்னையில் (Chennai) உணவகங்களில் இனி பார்சலுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும். உணவகங்களில் இனி பார்சலுக்கு (Parcel Food) மட்டுமே அனுமதி என்ற உத்தரவு விரைவில் பிறப்பிக்கப்படும். மேலும் திருமணம் மற்றும் துக்க நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் நபர்களின் எண்ணிக்கையும் குறைக்கப்படும் என்றார்.

அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News