தலையில் தேங்காய் உடைத்து பக்தர்கள் வினோத வழிபாடு

உடல் நல கோளாறு ஏற்படாமல் இருக்கவும், நாட்டில் பஞ்சம் நீங்கி செழிப்படையவும், திருப்பூரில் தலையில் தேங்காய் உடைத்து பக்தர்கள் வினோத வழிபாடு

Written by - Gowtham Natarajan | Last Updated : Aug 13, 2022, 04:16 PM IST
  • வினோத வழிபாடு மேற்கொள்ளும் கிராம மக்கள்
  • கடும் விரதமிருந்து பக்தர்கள் நேர்த்தி கடன்
  • நேர்த்தி கடன் செலுத்திய 400க்கும் மேற்பட்ட பக்தர்கள்
தலையில் தேங்காய் உடைத்து பக்தர்கள் வினோத வழிபாடு title=

திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட வீரபாண்டி, ஜெஜெநகர், ஆண்டிப்பாளைம், தட்டான் தோட்டம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மக்களின் குலதெய்வ கோயிலில் தட்டான் தோட்டம் பகுதியில் அமைந்துள்ளது.  இக்கோயிலில் ஆடி மாத திருவிழா, நேற்று காலை முகூர்த்தக் கால் நடுதலுடன் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து சக்தி கரகரம் அழைத்து வரப்பட்டது. பின்னர் இரவு ஏழு மணி அளவில் முக்கிய நிகழ்வான தலையில் தேங்காய் உடைக்கும் நிகழ்ச்சி நடந்தது. கோயில் பூசாரி முனுசாமி காப்பு கட்டி விரதமிருந்த பக்தர்கள் தலையின் மீது தேங்காய் உடைத்து துவக்கி வைத்தார்.

வினோத வழிபாடு,தலையில் தேங்காய் உடைத்து பக்தர்கள் வினோத வழிபாடு,தலையில் தேங்காய் உடைத்து,திருப்பூர்,வீரபாண்டி,ஜெஜெநகர், ஆண்டிப்பாளைம், தட்டான் தோட்டம்,

இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நேர்த்திக்கடன் செலுத்தி வழிப்பட்டனர். இதனைத் தொடர்ந்து இரவு முழுவதும் வீரபத்திரசாமி சரித்த நாடகம் நடைபெற்றது. இதனை ஏராளமான மக்கள் கண்டு ரசித்தனர். இந்த நிகழ்ச்சியில் 400க்கும் மேற்பட்ட பக்தர்கள் விரதமிருந்து தலையில் தேங்காய் உடைத்து நேர்த்தி கடன் செலுத்தினர்.

மேலும் படிக்க | அமைச்சர் பிடிஆர் கார் மீது செருப்பு வீச்சு - மதுரை பாஜகவினர் செய்த சம்பவம்

தேங்காய் உடைக்கும் போது, தலையில் ரத்தமோ, வலியோ ஏற்படாது.  இது போன்ற வினோத வழிபாடு மேற்கொள்ளும் போது வருடம் முழுவதும் உடல் நல கோளாறு ஏற்படாது எனவும், பஞ்சம் நீங்கி நாடு செழிப்படையும் என்பது ஐதீகம் என்றும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்க | நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் கடப்பாரையால் அடித்து மனைவி கொலை - வாக்குமூலம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News