திருப்பூர் மாவட்டம் விவசாயிகளின் வேண்டுகோளின் படி பாசனத்திற்காக திருமூர்த்தி அணை திறக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது!
திருப்பூர் மாவட்டம், திருமூர்த்தி அணையிலிருந்து பாலாறு படுகை நான்காம் மண்டல பாசன பரப்பிற்கு கூடுதலாக அரை சுற்றுக்கு தண்ணீர் திறந்து விட வேளாண் பெருமக்கள் விடுத்த கோரிக்கேயின் பேரில் திருப்பூர் மாவட்டம், திருமூர்த்தி அணையிலிருந்து பாலாறு படுகை நான்காம் மண்டல பாசன பரப்பிற்கு கூடுதலாக அரை சுற்றுக்கு மட்டும் 30.12.2017 முதல் மொத்தம் 900 மி.க. அடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்துவிட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் திருப்பூர் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் உள்ள 94,068 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், விவசாயப் பெருமக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி, நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர் மகசூல் பெற வேண்டுமென தமிழக முதல்வர் கேட்டுக்கொண்டுள்ளார்!