ஒரு நாள் பயண அட்டை கட்டணம் 50 ரூபாயிலிருந்து 80-ஆக உயர்!

சென்னை மாநகர அரசு பேருந்துகளில் ஒரு நாள் பயணம் செய்வதற்கான டிக்கெட் ரூ.50 இல் இருந்து ரூ.80 ஆக உயர்வு; மாதாந்திர பஸ் பாஸ் ரூ.1000 இல் இருந்து ரூ.1300 ஆக உயர்வு.

Last Updated : Feb 6, 2018, 08:18 AM IST
ஒரு நாள் பயண அட்டை கட்டணம் 50 ரூபாயிலிருந்து 80-ஆக உயர்! title=

சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தில் அளிக்கப்பட்டு வரும் ஒரு நாள் பயண அட்டை கட்டணம் 50 ரூபாயில் இருந்து 80 ரூபாயாக உயர்த்தப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த கட்டண உயர்வு வரும் 8-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது என்றும் கூறப்படுகிறது. தமிழக அரசு கடந்த 20ம் தேதி பேருந்து கட்டணத்தை மாற்றியமைத்த பிறகு, ஒரு நாள் பயணச்சீட்டு பாஸ் கட்டணம் நிர்ணயிக்கப்படாமல் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டது.

ஏற்கனவே பேருந்து கட்டண உயர்வுக்கு எதிராக திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக போராடி வருகின்றன. பொதுமக்களும் பேருந்து கட்டண உயர்வை குறைக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். 

இந்நிலையில் ஒரு நாள் பயண அட்டை கட்டணமும் உயர்த்தப்படுவதாக கூறப்படுகிறது.

Trending News